06/13/2026
நமக்கென ஒரு பாடல்
இருக்கும்
நமது மனதிற்கு மிகவும் நெருக்கமாய்
எனக்கெனவே மெட்டமைத்து
என்னை பின் தொடர்ந்து
என் வாழ்வில் இருந்து
வரிகளை களவாடி
கவி வடித்து
எழுதியதை போல…!!!
எப்போது கேட்டாலும்
இதழோறம் ஒரு புன்னகையும்
கண்ணோறம் கண்ணீரையும்
பிரசவித்துச் செல்லும்
வலிமை வாய்ந்ததாய்…!!!
எங்கோ ஒலிக்கும்
அதன் பிண்ணணி இசைக்கும்
உடலை
உயிர் பித்து எறிந்து போய்
தாளம் போடும்
உதடுகள் சந்தம் மாறாமல்
முணுமுணுக்கும்…!!!
ஏதோ ஒரு காரணத்திற்காய்
அந்த படலை நிராகரித்து
கடந்திருப்போம்
நிஜத்திலிருந்து விடுபட
நிதர்சனத்தை மறந்திட
அந்த பாடலை
தவிர்த்திருப்போம்…!!!
ஆனால்
ஏதோ ஓர் தேனீர் கடையின்
வானொலிப் பெட்டி
பாடும் போது
ஒரு நிமிடம் அதனை கடந்திட முடியாது
முழுவதும் கேட்ட பின்னே
உதிரும் கண்ணீர்களை விரட்டியபடி
கால்கள் நகரும்…!!!!
என்னுள் குடியிருக்கும்
உன்
நினைவுகளை
கனவுகள் மீட்பதை போல…!!!