31/05/2026
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியம் 2026 ன் நிதியீட்டத்தின் வயல் நிலங்களில் பயிர் மாற்றீட்டுத் திட்டத்தில் பயிரிடப்பட்ட பயிர்களின் அறுவடைவிழா ஆனது கனகாம்பிகைக்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் 29.05.2026 அன்று நடைபெற்றது.
பி.சிவனியா (விவசாய போதனாசிரியர்- கனகாம்பிகைக்குளம்)அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சோ.விஜயதாசன்(பிரதி விவசாய பணிப்பாளர்-கிளிநொச்சி)அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.மேலும் பாடவிதான உத்தியோகத்தர்கள்,விவசாயிகள்,என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.