Heritage Museum Kattankudy - SriLanka

Heritage Museum Kattankudy - SriLanka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Heritage Museum Kattankudy - SriLanka, History Museum, Main Street, Kattankudi.

பூர்வீக நூதன சாலையினை பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
19/02/2026

பூர்வீக நூதன சாலையினை பார்வையிடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

காத்தான்குடி பூர்வீக நூதனசாலையில் அபேதம் சமாதான கண்காட்சி. செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தமிழ், முஸ்லிம்...
16/02/2026

காத்தான்குடி பூர்வீக நூதனசாலையில் அபேதம் சமாதான கண்காட்சி.

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக சமூகத்தினரின் வாழ்வியல், கலாசாரம், சமூக உணர்வுகளை பிரதி பலிக்கும் வகையில் காத்தான்குடி பூர்வீக நூதனசாலையுடன் ஒன்றிணைந்து நடாத்தும் சமாதான கண்காட்சி அபேதம் 15.02.2026 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பூர்வீக நூதனசாலையில் காட்சிப்படுத்தப்பட்டது.

இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் காத்தான்குடி நகர முதல்வர் SHM அஸ்பர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பதில் தலைவர், செயலாளர் உட்பட செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சி நேற்றும் இன்றும் 16.02.2026 திங்கட்கிழமையும் முற்பகல் 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 04.02.2026 புதன்கிழமை நூதனசாலை மூடப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.-பூர்வீக நூதன...
28/01/2026

சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 04.02.2026 புதன்கிழமை நூதனசாலை மூடப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.

-பூர்வீக நூதனசாலை காத்தான்குடி-

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை திருத்த வேலை காரணமாக 13.10.2025 ஆம் திகதி தொடக்கம் 17.10.2025 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூ...
09/10/2025

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை திருத்த வேலை காரணமாக 13.10.2025 ஆம் திகதி தொடக்கம் 17.10.2025 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை க்கு அவுஸ்திரேலிய Queensland university of technology பல்கலைக்கழக பேராசிரியர் Azharul Kari...
09/09/2025

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை க்கு அவுஸ்திரேலிய Queensland university of technology பல்கலைக்கழக பேராசிரியர் Azharul Karim (PHD melb mENG Nus Bsc Eng CUET) அவர்கள் 09.09.2025 ல் விஜயம் செய்தார்.

குறித்த நிகழ்வில் காத்தான்குடி கௌரவ நகர முதல்வர் SHM அஸ்பர் மற்றும் நகரசபை உறுப்பினர் றுஸ்வின் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பூர்வீக நூதனசாலையினை பொதுமக்கள் பார்வையிடும் நேரம் பின்வருமாறு மாற்றியமைக்கப்படுகின்றது.1. திங்கள், புதன்,வ...
05/10/2024

காத்தான்குடி பூர்வீக நூதனசாலையினை பொதுமக்கள் பார்வையிடும் நேரம் பின்வருமாறு மாற்றியமைக்கப்படுகின்றது.

1. திங்கள், புதன்,வியாழக் கிழமைகளில் மு.ப. 9 தொடக்கம் பி.ப. 4.00 வரை

2. வெள்ளிக் கிழமைகளில் பி.ப. 2.30 முதல் பி.ப. 7.30 வரை

3. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மு.ப. 9 முதல் பி.ப. 7.30 வரை

குறிப்பு: துப்பரவு பணிகளின் பொருட்டு பிரதி செவ்வாய்க்கிழமைகளில் நூதனசாலை பொது மக்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

செயலாளர்
நகர சபை
காத்தான்குடி.

காத்தான்குடி பூர்வீக நூதனசாலைக்கு  தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் விஜயம்!!காத்தான்குடி பூர்வீக நூதனசாலைக்கு    தென் ஆபிரிக்...
01/12/2023

காத்தான்குடி பூர்வீக நூதனசாலைக்கு தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் விஜயம்!!

காத்தான்குடி பூர்வீக நூதனசாலைக்கு தென் ஆபிரிக்காவுக்கான உயர்ஸ்தானிகர் (Sandile Edwin Schalk) சாண்டிலே எட்வின் ஷால்க் அவர்கள் 29.11.2023 அன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

நகரசபையின் செயலாளர் திருமதி. MRF. றிப்கா ஷபீன் அவர்களினால் வரவேற்கப்பட்ட தென் ஆபிரிக்க உயா்ஸ்தானிகருக்கு பூர்வீக நூதனசாலையின் உருவாக்கம், காட்சிப் படுத்தப்பட்டுள்ள புராதனப் பொருட்கள் தொடர்பான வரலாற்றுத் தகவல்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நகர சபையின் செயலாளர் அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.

மேற்படி விஜயத்தின் போது கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தவிசாளர் ஏ.பீ.மதனவாசன் அவர்களும் பங்கேற்றிருந்தார்கள்.

15/09/2023
காத்தான்குடி பூர்வீக நூதனசாலை திருத்தவேலைகளுக்காக 10 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது!திருத்த வேலை காரணமாக புராதன ந...
31/08/2023

காத்தான்குடி பூர்வீக நூதனசாலை திருத்தவேலைகளுக்காக 10 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது!

திருத்த வேலை காரணமாக புராதன நூதன சாலையானது எதிர்வரும் 04.09.2023 ஆம் திகதி தொடக்கம் 14.09.2023 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்பதுடன் இக்காலப்பகுதியில் நூதன சாலையினை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதையும் அறியத்தருகின்றோம்.

"காத்தான்குடி நூதனசாலை முழுமையாக மூடப்படுகின்றது" என்று ஒரு சில ஊடகங்களில் பரப்பப்பட்டுவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதோடு எதிர்வரும் 15.09.2023 வெள்ளிக்கிழமை முதல் வழமைபோன்று பொதுமக்கள் நூதனசாலையிணை பார்வையிட முடியும் என்பதையும் மகிச்சியுடன் அறியத்தருகின்றோம்.

செயலாளர்,
நகர சபை,
காத்தான்குடி

முக்கிய அறிவித்தல்திருத்த வேலை காரணமாக புராதன நூதனசாலையானது எதிர்வரும் 04.09.2023 ஆம் திகதி தொடக்கம் 14.09.2023 ஆம் திகத...
31/08/2023

முக்கிய அறிவித்தல்

திருத்த வேலை காரணமாக புராதன நூதனசாலையானது எதிர்வரும் 04.09.2023 ஆம் திகதி தொடக்கம் 14.09.2023 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும். இக்காலப்பகுதியில் நூதனசாலையினை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

செயலாளர்,
நகர சபை,
காத்தான்குடி

இன்று அக்கரைப்பற்று அஸ் சிராஜ் மகா விந்தியாலயத்தில் இருந்து தரம் 5 மற்றும் 6ஆம் வகுப்பில் கல்விகற்கும் சுமார் 133 மணவர்க...
26/07/2023

இன்று அக்கரைப்பற்று அஸ் சிராஜ் மகா விந்தியாலயத்தில் இருந்து தரம் 5 மற்றும் 6ஆம் வகுப்பில் கல்விகற்கும் சுமார் 133 மணவர்களும் அவர்களை வழிநடாத்த 6 ஆசிரியர்களும் எமது காத்தான்குடி பூர்வீக நூதனசாலைக்கு வருகை தந்திருந்தனர்...

சிறுவர்களாக இருந்தாலும் நிறைய விடயங்களை கேட்டு அறிந்து கொண்டனர் சில விடயங்களை ஆச்சரியமாக பார்வையிட்டதுடன் சில பழமையான பொருட்களை பற்றி அதன் வரலாறு என்பவற்றை மிகவும் ஆர்வமாக கேட்டு அறிந்து கொண்டார்கள், நூதனசாலை உத்தியோகத்தர்களால் மிகவும் சிறப்பாக வழி நடாத்தப்பட்டதற்காக நன்றியும் கூறி வருகை தந்த ஆசிரியர்கள் சிலர் எங்களுக்கு வரலாறு சம்மந்தமான சில நல்ல கருத்துக்களையும் கூறிச் சென்றனர்...

பூர்வீக நூதனசாலை
காத்தான்குடி.

Address

Main Street
Kattankudi
30100

Telephone

+94652248311

Website

Alerts

Be the first to know and let us send you an email when Heritage Museum Kattankudy - SriLanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category