அப்புறம் விழுப்புரம்

அப்புறம் விழுப்புரம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அப்புறம் விழுப்புரம், History Museum, Villupuram.

ஒய்மான் நல்லியக்கோடன்...சிறுபாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன். கடையெழு வள்ளல்களுக்கு சற்று பிற்பட்ட காலத்தைச் சேர்ந்த...
17/12/2025

ஒய்மான் நல்லியக்கோடன்...

சிறுபாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன். கடையெழு வள்ளல்களுக்கு சற்று பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்.

திண்டிவனம், கிடங்கிலைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தியவர்.

இவருக்கான நினைவுச் சின்னம் எதுவும் திண்டிவனம் பகுதியில் இதுவரை இல்லை.

அங்குப் புதிதாகத் திறக்கப்பட உள்ள பேருந்து நிலையத்திற்கு ஒய்மான் நல்லியக்கோடன் பெயரைச் சூட்டலாமே!

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாக செயலர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் நேற்று கோரிக்கை மனு அனுப்பி இருக்கிறேன்.

இன்றைய தினகரனில் செய்தியாகப் பிரசுரமாகி இருக்கிறது.

செய்தியாளர் நண்பர் தயாநிதி அவர்களுக்கு மிகவும் நன்றி!

காஞ்சிபுரம் கல்வெட்டுகளில் தீபாவளி...காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் விஜயநகரர் காலத்தில் (கி.பி.14-16 ஆம் நூற்றாண...
20/10/2025

காஞ்சிபுரம் கல்வெட்டுகளில் தீபாவளி...

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் விஜயநகரர் காலத்தில் (கி.பி.14-16 ஆம் நூற்றாண்டுகளில்) ஏராளமான திருப்பணிகள் நடந்துள்ளன. இரண்டாம் வீர கம்பணன், சாளுவ நரசிம்மராயர், வீரநரசிங்க தேவராயர், கிருஷ்ணதேவராயர், அச்சுததேவ மகாராயர் உள்ளிட்ட விஜயநகர மன்னர்களின் காலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இங்கு இருக்கின்றன.

கோயிலுக்கு வழங்கப்பட்ட பொன், பொருள், நிலம் உள்ளிட்ட தானங்கள், கொடையாளர்கள், கோயில் பணியாளர்கள், தானமாக வழங்கப்பட்ட ஊர்கள், படையல் உணவிற்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், உப்பு, புளி, மிளகு, சீரகம் போன்ற பொருட்களின் நீண்ட பட்டியல்கள் கல்வெட்டுகளில் விலாவாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இறைவனுக்கான அமுது படையலில் இட்டலி, தோசை, வடை, அப்பம், பணியாரம், அதிரசம் ஆகியவை முக்கிய இடம் பிடித்திருந்தன.

சதாசிவதேவ மகாராயர் கல்வெட்டில் (கி.பி.1555) ஆழ்வார்கள் மற்றும் பெரிய ஜீயர் பிறந்த நட்சத்திரங்களில் திருவிழாக்கள் நடத்தப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்வார்கள் ஒவ்வொருவரது பிறந்த நட்சத்திரமும் தனித்தனியே இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டில் 100 நாட்கள் நடத்தப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி, திருக்கார்த்திகை, விஜயதசமி உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்களின் பட்டியலும் கி.பி.1558ஆம் ஆண்டு கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன.

கோயில் திருவிழாக்களைப் பட்டியலிடும் கிருஷ்ண தேவராயர் கல்வெட்டில் (கி.பி.1521) ‘தீபாவளி’ இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அச்சுதேவ மகாராயர் கால கல்வெட்டுகள் (கி.பி.1533, 1537), சதாசிவ மகாராயர் (கி.பி.1553) கல்வெட்டு மற்றும் ஆண்டு விவரம் அறிய இயலாத கல்வெட்டு ஒன்றிலும் தீபாவளி திருனாள், தீபாவளி னாள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 504 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது எனும் தகவல் நமக்குக் கிடைத்துள்ளது.

தீபாவளி குறித்து திருமலை திருப்பதி பெருமாள் கோயிலில் உள்ள கி.பி.1542 ஆம் ஆண்டு தமிழ் கல்வெட்டு மட்டுமே இதுவரை ஆதாரமாக இருந்து வந்தது. தற்போது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலும் தீபாவளி குறித்த புதிய தகவலை நமக்குத் தெரிவித்துள்ளது.

அன்புடன்,
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்

முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.எஸ்.ஜெகத்ரட்சகன்,காங்கிரஸ் பிரமுகர் திரு. நா...
07/10/2025

முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.எஸ்.ஜெகத்ரட்சகன்,

காங்கிரஸ் பிரமுகர் திரு. நாசே ஜெ.ராமச்சந்திரன்,

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திரு. மூர்த்தி

ஆகிய முக்கியப் பிரமுகர்கள், வழுதாவூர் மண்ணின் மைந்தர்கள் ஆவர்!

வழுதாவூர் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கு இவர்கள் முன்வர வேண்டும்..!

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வழுதாவூர் கோட்டை குறித்த வரலாற்றுச் செய்தி இன்றைய தினகரன் நாளிதழில்... எனது பேட்டியுடன் பிரசுரமாகி இருக்கிறது!

செய்தியாளர் திரு. தயாநிதி
Vpmdhayanithi Dkn அவர்களுக்கு மிகவும் நன்றி!

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் இயக்குநர் பொறுப்பு வகித்தவர்...பூம்புகார், கொடுமணல், அழகன்குளம், சேந்தமங்கலம் உள்ளிட...
06/10/2025

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் இயக்குநர் பொறுப்பு வகித்தவர்...

பூம்புகார், கொடுமணல், அழகன்குளம், சேந்தமங்கலம் உள்ளிட்ட அகழாய்வுகளுக்கு முன்னின்றவர் ...

கல்லெழுத்துக் கலை முதல் தமிழர் காசு இயல் வரை
முத்தரையர் முதற்கொண்டு காடவர் வன்னியர் வரை
சமணத் தடயங்களையும் தொகுத்து...‌
பாளையக்காரர்களையும் பட்டியலிட்டவர்.
ஏராளமான வரலாற்று நூல்களுக்கும் ஆய்வேடுகளுக்கும்
சொந்தக்காரராகத் திகழ்ந்தவர்...

ஆழ்ந்த இலக்கண இலக்கிய எழுத்துப் புலமையுடையவர்...

“பாரதிதாசன் பரம்பரை”ப் போன்று
“கல்வெட்டுப் பரம்பரை”யைத் தோற்றுவித்த பிதாமகர்...

தமிழ்நாடு தொன்மையியல் ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர்...

“தமிழ்நாட்டார் எதற்காக ‘பிராமி’ என்று பெயர் வைக்க வேண்டும்? அழகு உடையவள் அழகி. அருள் உடையவர்கள் அருளி என்பதைப் போல தமிழ் எழுத்தும் தமிழி என்றே கொள்ளலாம். அதிகம் சொல்வானேன், தமிழ் என்றே சொல்லலாம்.” என அடித்துச் சொன்னவர்...

ஐயா. நடன.காசிநாதன் அவர்களின் இழப்பு, தமிழ் வரலாற்றுக்குப் பேரிழப்பாகும்..!

காடவ மாமன்னர் கோப்பெருஞ்சிங்கன் பிறந்தநாள் விழா அவர் ஆட்சிசெய்த சேந்தமங்கலத்தில் நேற்று வெகு சிறப்பாகவே நடந்தது!அரசியல் ...
06/09/2025

காடவ மாமன்னர் கோப்பெருஞ்சிங்கன் பிறந்தநாள் விழா அவர் ஆட்சிசெய்த சேந்தமங்கலத்தில் நேற்று வெகு சிறப்பாகவே நடந்தது!

அரசியல் பண்பாட்டுத் தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆளுமைகள் பலரையும் (முதன்முறையாக) சந்திக்கவும் அவர்களுடன் கலந்து உரையாடவும் நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது!

நமக்குத் தெரிந்த வரலாற்றை, வரலாற்றுத் தகவல்களை ஆளுமைகளுடன் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது!

நிகழ்வின் முத்தாய்ப்பு: நண்பர் குமரன் கை வண்ணத்தில் மிகவும் சிறப்பாக வந்திருக்கும் கோப்பெருஞ்சிங்கன் ஓவியம் - திறப்பு நிகழ்வாகும்!
வாழ்த்துக்கள் Kumaran K !

நிகழ்வுக்கு ஏற்பாடுகள் செய்த சேந்தமங்கலம் முக்கிய பிரமுகர் வண்டிப்பாளையம் வீரபாண்டியன் மற்றும் மணி ஆகியோர் பாராட்டிற்கு உரியோர்!

வரலாற்றில் சிறந்த தந்தை மகன் சோழப் பேரரசர் இராஜராஜனும் இராஜேந்திரனும் என்றால், அதற்கடுத்த நிலையில் இருப்பவர்கள் காடவகுல ...
04/09/2025

வரலாற்றில் சிறந்த தந்தை மகன் சோழப் பேரரசர் இராஜராஜனும் இராஜேந்திரனும் என்றால், அதற்கடுத்த நிலையில் இருப்பவர்கள் காடவகுல மன்னர்கள் முதலாம் மற்றும் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன்கள்!

தில்லைத் தலத்தின் தெற்கு கோபுரத்தை தந்தை எடுத்தாரென்றால் கிழக்கு கோபுரம் மகனால் எடுக்கப்பட்டது. தந்தை பரதம் வல்லான் என்று போற்றப்பட்டால், மகன் தமிழ்நாடு காத்த பெருமானாக உயர்ந்து நிற்கிறார்.

ஏழிசை மோகன் மணவாளப்பெருமாள் சேந்தமங்கலத்தில் தலைநகரை ஏற்படுத்தி வாணிலை கண்டீச்வரமுடைய நாயனாரை எழுந்தருளுவித்தார்!

அவரது மகன் முதலாம் கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை சிறைவைத்து வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார்.

இவரது மகன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன், தமிழ்நாடு காத்த பெருமானாகக் காட்சியளிக்கிறார்.

இம்மூவருமே சோழச் சக்ரவர்த்திகளுக்கு இணையாக ‘சகலபுவனச் சக்ரவர்த்தி” எனும் தனித்த அடையாளத்துடன் தங்களை அழைத்துக் கொண்டனர்!

வரலாற்றில் இடம்பிடிப்பதற்கான ஆரோக்கியமான போட்டி, தந்தை மகன்களுக்கு இடையே 800 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. மகிழ்ச்சி!

வரலாறு இன்றும் பேசுகிறது!
என்றும் பேசும்!

அவனி ஆளப் பிறந்தான் காடவராய கோப்பெருஞ்சிங்கன் பிறந்தநாள் நாளை!

விழுப்புரம், ஆ.கூடலூர் கிராமத்தில் கடந்த 2022 செப்டம்பரில், காடவகுல வேந்தன் கோப்பெருஞ்சிங்கன் சிற்பத்தை கண்டறிந்ததில் நமக்கு கூடுதல் மகிழ்ச்சி!

சேந்தமங்கலம் ஆபத்சகாயீஸ்வரர் ஆலய குடமுழுக்கு நாளை....சேந்தமங்கலம். சென்னை–திருச்சி பெருவழிச் சாலையில் உளுந்தூர்பேட்டைக்க...
03/09/2025

சேந்தமங்கலம் ஆபத்சகாயீஸ்வரர் ஆலய குடமுழுக்கு நாளை....

சேந்தமங்கலம். சென்னை–திருச்சி பெருவழிச் சாலையில் உளுந்தூர்பேட்டைக்கு முன்னதாக, கெடில நதிக்கரையில் அமைந்துள்ள நகரம்.

ஏழிசை மோகன் மணவாளப்பெருமாள் (பொ.ஆ.1191-1213). பிற்காலப் பல்லவர் என்றழைக்கப்படும் காடவர்குல வழித்தோன்றல். சோழச் சக்ரவர்த்திகளுக்கு இணையாக ‘சகலபுவனச் சக்ரவர்த்தி’ எனும் அடைமொழியுடன் தனித்தன்மை வாய்ந்த அரசராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.

இத்தகு சிறப்புகள் வாய்ந்த மணவாளப்பெருமாள்தான், சேந்தமங்கலத்தில் படைவீட்டை (கோட்டை) ஏற்படுத்தியவர். சிற்றுரைத் தனது தலைநகராக மாற்றியவர்.

கோட்டை கொத்தளம் மட்டுமல்ல; வாணிலை கண்டீச்வரமுடைய நாயனாரை (வாணிலை – போருக்கு கிளம்பும் அரசன் நல்ல முகூர்த்தத்தில் தன் வாளினை அனுப்பி வைப்பது) எழுந்தருளுவித்தவர். தனது பெயரில் “ஏழிசை மோகன் சந்தி “ ஏற்படுத்தி அதற்கான நிவந்தங்களையும் அளித்தவர்!

மணவாளப்பெருமாளின் செம்மார்ந்த இரு மகனார் தான் முதலாம் மற்றும் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன்கள். வரலாற்றில் நீங்கா இடத்தைப் பிடித்தவர்கள்.

சேந்தமங்கலத்து இறைவன், காடவர் காலத்திலும் பாண்டியர் காலத்திலும் “வாணிலை கண்டீச்வரமுடைய நாயனார்“ என்றே அழைக்கப்பட்டார். விஜயநகரர் ஆட்சியின் போது “ஆபத்துகாத்தருளிய நாயனார்” ஆக மாற்றம் பெற்றார்.

தற்காலத்தில் “ஆபத்சகாயீஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறார்!

முழுவதும் கருங்கற்களைக் கொண்டு இழைக்கப்பட்ட இக்கோயில் சோழர் கால கோயில் கட்டடக்கலைக்குச் சான்றாக அமைந்துள்ளது. அரிய கல்வெட்டுகள் அழகிய சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது ஆபத்சகாயீஸ்வரர் கோயில். இங்கிருக்கும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்க காண கண்கோடி வேண்டும்! நுட்பமான வேலைப்பாடு!

மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோயிலின் புனரமைப்புப் பணிகள் ஆண்டுக்கணக்கில் நடந்து வந்தன.

இப்பணிகள் ஒருவழியாக முடிக்கப்பெற்று, இதோ நாளை (4ம் தேதி) குடமுழுக்கு நடக்க இருக்கிறது. மகிழ்ச்சி அளிக்கிறது!

புனரமைக்கப்பட்ட திருக்கோயிலைக் காணவேண்டும்! அதனோடு, கோப்பெருஞ்சிங்கனின் ‘இசைக்கும் கற்குதிரை’ சிற்பங்கள் இருக்கும் இடங்களையும் சீரமைத்து இருக்கிறார்களா என்றும் பார்க்க வேண்டும்!
விரைவில் சென்று பார்க்கலாம்!

நாளை வியாழன் காலை 9-10.30 மணிக்கு நடைபெற இருக்கும் குடமுழுக்கிற்கு நீங்கள் நேரில் சென்று வாருங்கள்..!

அன்புடன்,
விழுப்புரம் கோ.செங்குட்டுவன்

விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பில்லாத பழமைவாய்ந்த சிற்பங்கள்...இன்றைய தினமணி நாளிதழில் எனது பேட்டியுடன் வந்திருக்கும்...
02/09/2025

விழுப்புரம் மாவட்டத்தில்
பாதுகாப்பில்லாத
பழமைவாய்ந்த சிற்பங்கள்...

இன்றைய தினமணி நாளிதழில் எனது பேட்டியுடன் வந்திருக்கும் சிறப்பு செய்தி!

நன்றி: செய்தியாளர்
திரு. வைத்தியலிங்கம் அவர்கள்.

விழுப்புரம் மாவட்டம், ஆலகிராமம் விநாயகர்..தமிழ்நாட்டின் முதல் விநாயகர்!2005ஆம் ஆண்டில் ஆய்வாளர்கள் வீரராகவன், மங்கையர்க்...
26/08/2025

விழுப்புரம் மாவட்டம், ஆலகிராமம் விநாயகர்..

தமிழ்நாட்டின் முதல் விநாயகர்!

2005ஆம் ஆண்டில் ஆய்வாளர்கள் வீரராகவன், மங்கையர்க்கரசி ஆகியோரால் கண்டறியப்பட்டவர்.

இதிலிருக்கும் வட்டெழுத்தினை வாசித்து, இவர்தான் தமிழ்நாட்டின் மூத்த விநாயகர் என அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களால் அறிவிக்கப்பட்டவர்.

ஆலகிராமம் விநாயகர் குறித்தான இன்றைய தினகரன் நாளிதழில், எனது பேட்டி மற்றும் புகைப்படத்துடன் பிரசுரமாகி இருக்கும் சிறப்பு செய்தி.

இதற்கான முன்முயற்சி மேற்கொண்ட விழுப்புரம் தினகரன் செய்தியாளர் நண்பர்
Vpmdhayanithi Dkn மிகவும் நன்றிக்கு உரியவர்!

Address

Villupuram
605602

Alerts

Be the first to know and let us send you an email when அப்புறம் விழுப்புரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category