முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்

  • Home
  • India
  • Tirumayam
  • முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்
Directions Website

முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம் மறைக்கப்பட்ட அழிக்கப்பட்ட வரலாற்றுகளின் ஆய்வுக்கூடம்

கொன்னையூர் நினைவுத்தூண் கல்வெட்டுகள்!புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், கொன்னையூர் அருகிலுள்ள கொன்னைக் கண்மாயி...
19/08/2026

கொன்னையூர் நினைவுத்தூண் கல்வெட்டுகள்!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், கொன்னையூர் அருகிலுள்ள கொன்னைக் கண்மாயில் கண்டறியப்பட்ட 10 நினைவுத்தூண் கல்வெட்டுகள், சோழர் கால வரலாற்றில் குறிப்பிடத்தக்க தொல்லியல் சான்றுகளாகத் திகழ்கின்றன. அவற்றில் 9 கல்வெட்டுகள் வாசிக்கக்கூடிய நிலையில் உள்ளன. இவை ராஜேந்திர சோழன் முதல் குலோத்துங்க சோழன் வரையிலான காலத்தைச் சேர்ந்தவை.

இந்த நினைவுத்தூண்களில் #குன்றன்சாத்தன் என்ற பெயர் இருமுறை இடம்பெறுகிறது. அதோடு மருதன் செட்டி, ஞெட்டி, கங்கை கொண்ட சோழ செட்டி, முத்தங் கஞ்சாறன் எனும் மும்முடி சோழ சிதிலட்டி, சிறப்பன் உள்ளிட்ட பெயர்களும் காணப்படுகின்றன. “செட்டி”, “ஞெட்டி” போன்ற சொற்கள் வணிகத் தொடர்பைக் காட்டுவதோடு, ஒரு கல்வெட்டில் “படை” என்ற குறிப்பும் இடம்பெறுவதால், வணிகர்களுடன் வீரர்கள் அல்லது காவல் சார்ந்தவர்களும் இப்பகுதியில் செயல்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால் “குன்றன் சாத்தன்” என்ற பெயர் நம்மைச் சுற்றியுள்ள மற்ற வரலாற்றுச் சான்றுகளையும் நினைவுபடுத்துகிறது.
கொன்னையூர் அருகிலுள்ள செம்பூதி என்ற ஊரின் பெயர், சாத்தன்பூதி என்ற முத்தரையர் மன்னரின் பெயருடன் தொடர்புடையதாக உள்ளூர் வரலாற்று ஆய்வுகளில் குறிப்பிடப்படுகிறது. சாத்தன் என்ற பெயரைக் கொண்ட முத்தரையர் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய ஊர்ப்பெயர்கள், கோயில்கள், நீர்நிலைகள் மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் இப்பகுதியில் காணப்படுகின்றன.

அதேபோல், கொன்னையூர் அருகேயுள்ள ஆலவயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாத்தன் காடு, சாத்தன் கண்மாய், சாத்தன்/சாத்தகருப்பன் போன்ற பெயர் வழக்குகளும் காணப்படுகின்றன.
மேலும், கொன்னையூர் கல்வெட்டுகளில் இவ்வூர் “கொன்றையூர்”, “உத்தமசோழபுரம்” என்ற பெயர்களிலும் குறிப்பிடப்பட்டிருப்பது இப்பகுதியின் தொன்மையை மேலும் வெளிப்படுத்துகிறது.

“குன்றன் சாத்தன்” என்ற பெயருக்கும், இப்பகுதியில் காணப்படும் சாத்தன் பெயருடைய பழைய மரபுச் சான்றுகளும் ஒரே நிலப்பரப்பில் தொடர்ந்து காணப்படும் சாத்தன் என்ற பெயர், பழமையான ஊர்ப்பெயர்கள், நீர்நிலைப் பெயர்கள், கோயில் மற்றும் கல்வெட்டு சான்றுகள் ஆகியவை இணைந்து பார்க்க வேண்டிய முக்கியமான வரலாற்றுத் தடயங்களாக உள்ளன.
நன்றி...

ஏஎஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்

#கொன்னையூர் #கல்வெட்டுகள் #நினைவுத்தூண்கள் #சோழர்வரலாறு #முத்தரையர்வரலாறு #குன்றன்சாத்தன் #செம்பூதி #பொன்னமராவதி #புதுக்கோட்டை #தமிழர்வரலாறு #வரலாற்றுஆய்வு

10/08/2026

மொங்காப்பட்டி பழமையான சிவாலயம் ! அழிந்து வரும் வரலாற்றுச் சின்னம்!

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், அரசமலை ஊராட்சிக்குட்பட்ட மொங்காப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பழமையான சிவாலயம், இன்று முழுமையாகச் சிதிலமடைந்து, பராமரிப்பின்றி காணப்படுகிறது.

முத்தரையர் மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும், பின்னர் சோழர்களின் ஆட்சிக் காலத்திலும் முக்கியத்துவம் பெற்றிருந்ததாகக் கருதப்படும் வரலாற்றுப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியின் பழமையான வரலாற்றையும், அக்காலத்திய கலை மற்றும் கட்டிடக்கலை மரபையும் வெளிப்படுத்தக்கூடிய முக்கியமான சான்றாக இவ்வாலயம் இருந்திருக்கலாம்.

ஆனால், காலப்போக்கில் உரிய பராமரிப்பு இல்லாததால், கோயில் கட்டிடம் பெருமளவில் சிதிலமடைந்து, தற்போது மரங்களும் செடிகளும் சூழ்ந்த நிலையில் ஒரு பழமையான வரலாற்றுச் சின்னத்தைப் போல அல்லாமல், அடர்ந்த காடு போன்று காட்சியளிக்கிறது.

இக்கோயிலில் இருந்த மூலவர் மற்றும் பிற சிற்பங்கள் புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கோயில் வளாகத்தில் பழமையான, சிதிலமடைந்த நந்தி பகவான் சிலை மட்டுமே காணப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், இங்கு இருந்த விநாயகர் சிற்பம் பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டு, அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

கோயில் வளாகத்தில் பழங்காலக் கட்டிடப் பகுதிகளும், கற்களும், சிதிலங்களும் காணப்படுகின்றன. இவற்றில் ஏதேனும் கல்வெட்டு அல்லது வரலாற்றுச் சான்றுகள் உள்ளனவா என்பது முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டிய முக்கியமான விஷயமாகும்.

ஒரு காலத்தில் பக்தர்களின் வழிபாட்டால் சிறந்து விளங்கியிருக்கக்கூடிய இவ்வாலயம், இன்று வழிபாடின்றியும் பராமரிப்பின்றியும் அழிவின் விளிம்பில் உள்ளது.

ஏஎஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்

07/03/2026

கண்ணப்ப நாயனார் வரலாறு

பொன்னமராவதி நகர் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில்.

04/03/2026

கரகப்படையல் பெருவிழா!

புதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி அருகேயுள்ள வெள்ளையாண்டிபட்டி கிராமத்தில் 23ஆண்டுகளுக்கு பிறகு பாரம்பரிய முறைப்படி முத்தரையர் வகையறாகளின் கரகப்படையல் நடைபெறுகிறது.
வெள்ளையாண்டி அம்பலம் என்ற மூதாதையர் முதலில் இவ்வூர் குடி அமைத்தவராக போற்றப்படுகிறார்.அவர்கள் பெயரில் இவ்வூரும் அமைந்துள்ளது.இந்த வெள்ளையாண்டி அம்பலம் அவர்களின் குல தெய்வமான ஸ்ரீ வெங்களத்தி அம்மன்,பிடாரி,பட்டவன்,பெரியகருப்பர்,சின்னகருப்பர்,குன்னக்கருப்பர் என்ற தெய்வங்களை குல தெய்வமாக கொண்டுள்ளனர்.
தற்போது வெள்ளையாண்டிபட்டியில் மூன்று கரை அம்பலகாரர்களாக உள்ளனர். இவர்களின் மற்ற பங்காளிகள் ரெட்டியப்பட்டி,ஆலவயல் போன்ற பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ளனர்.
தற்போறு 23 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பான முறையில் கரைகப்படையல் நடைபெற்றுவருகிறது. கடந்த 26-2-2026 தொடங்கி 2-3-26 நிறைவு பெறுகிறது.
மேலும் இங்குள்ள கரகம் மிகவும் பழமை வாய்ந்த ஏழு சுட்டி கரகமாகும்.

இங்ஙனம்
ஏஎஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்

03/03/2026

முத்தரையர் நாட்டு பாரம்பரிய கரகப்படையல்
பொன்னமராவதி வட்டாரத்தில் நடைபெறுகிறது.

மகா சிவராத்திரி வழிபாடு 2026 முத்தரையர் மன்னர்கள் காலத்தில் உருவாக்கிய கற்றிளிகள் மற்றும் குடைவரைக்கோவில் வழிபாடு!கடந்த ...
28/02/2026

மகா சிவராத்திரி வழிபாடு 2026

முத்தரையர் மன்னர்கள் காலத்தில் உருவாக்கிய கற்றிளிகள் மற்றும் குடைவரைக்கோவில் வழிபாடு!

கடந்த 15-2-2026ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 11 சிவனாலங்களுக்கு நமது முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம் சார்பில் முதலாம் ஆண்டு வழிபாடு நடத்தினோம்.

1)ஏனாதி சிவன் சிறிய கற்றிளி கோவில்
2)பொன்னமராவதி நகர் பகுதி சிவன் கோவில்
3)பூவாலைக்குடி குடைவரை சிவன்
4)மலையக்கோவில் கிழக்கு சிவன் குடைவரை
5)மலையக்கோவில் மேற்கு சிவன் குடைவரை
6)தேவர்மலை சிவன் குடைவரை
7)திருமயம் சிவன் குடைவரை
8)நார்த்தாமலை சுனை சிவன் குடைவரை
9)நார்த்தாமலை பழியிலி ஈஸ்வரர் குடைவரை
10)நார்த்தாமலை சாத்தன்பூதீஸ்வரம்
11)நார்த்தாமலை அகிலாண்டேஸ்வரி ஜம்புலிங்கம் ஆலயம்
12)சித்தூர் சிவன் கற்றளி
மேலும்
13)வலையப்பட்டி அடைக்கலங்காத்தார் கோவில்
14)வலையப்பட்டி பெரியநாச்சி ஆலயம்
15)தொட்டியம்பட்டி அழகிய நாச்சி ஆலயம்
16)திருமயம் பெருமால் குடைவரை

காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 10.30மணி அளவில் வழிபாடுகளை முடித்தோம்.இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் சென்ற அனைத்து கோவில்களிலும் நாம் செல்லும் போதுதான் பூஜை,அபிஷேகம்,ஆலத்தி என அனைத்தும் நடந்தது நமக்குனே அமைந்தது போல இருந்தது.இனிவரும் காலங்களில் பெரிய அளவில் முன்னெடுப்போம் ...

நன்றி...

இதில் மாதவன் சேர்வை,ரமேஸ் ரமேஷ் முத்துராஜா இளங்கோ சேர்வைக்காரர், ஜெயமணி மணிகட்டி நம் உறவுகள் கலந்துகொண்டனர்.

இங்ஙனம்
ஏஎஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்

16/02/2026

வீடியோ கொஞ்சம் பெரியதாக உள்ளது. ஆனால் அனைவரும் கண்டிப்பாக முழுவதும் பார்க்க வேண்டிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க காணொளி.

நேற்றைய தினம் சிவராத்திரியை முன்னிட்டு முத்தரையர் மன்னர்களால் எடுப்பித்த கற்றளி மற்றும் குடைவரை கோவில்களை முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம் குழுவினரால் வழிபாடு செய்து ஆன்மீகப் பயணத்தில் ஈடுபட்டனர்

இதுவரை யாரும் செய்திடாத ஒரு மகத்தான சமூக சிந்தனை கலந்த ஆன்மீகப் பணியை மேற்கொண்ட முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூட குழுவினருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் 🙏♥️💛👑

#முத்தரையர்_வரலாறு_ஆய்வுக்கூடம்
#முத்தரையர்_சோழ_மன்னர்கள்
#கற்றளி_கோவில்கள்
#குடைவரை_கோவில்கள்

களப்பிரர்களை வென்ற கடுங்கோன் பாண்டியன்!                 தாய் நாட்டை மீட்ட கடுங்கோன் பாண்டியன் வரலாற்றில் சிறப்புமிக்க மா...
13/02/2026

களப்பிரர்களை வென்ற கடுங்கோன் பாண்டியன்!

தாய் நாட்டை மீட்ட கடுங்கோன் பாண்டியன் வரலாற்றில் சிறப்புமிக்க மாமன்னன்.அதே போல கடுங்கோன் என ஏன் அழைப்பட்டார் என்பதும் வரலாற்றில் குறிப்பிடதக்கது.

கடுங்கோல் – கொடுமை அல்ல; நீதியின் கடுமை
களப்பிரர் ஆட்சிக்குப் பின் பாண்டிய அரசாட்சியை மீட்டெடுத்த அரசனாக வரலாற்றில் உயர்ந்து நிற்பவன் கடுங்கோன் பாண்டியன். அவன் பெயரிலேயே உள்ள “கடுங்கோன்” என்ற சொல் குறித்து சிலர் கொடுமையான ஆட்சியைச் சுட்டுவதாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் தமிழர் அரசியல் மரபையும், வரலாற்றுச் சூழலையும், சொற்பொருள் நுட்பத்தையும் ஆழமாக ஆராய்ந்தால், இந்த விளக்கம் முழுமையற்றதும் தவறானதும் என்பது தெளிவாகிறது.
தமிழ் அரசியல் மரபில் செங்கோல் என்பது நேர்மை, சமநிலை, சிறந்த ஆட்சி என்பதைக் குறிக்கிறது. அதே சமயம் கடுங்கோல் என்பது அநீதியை ஒழிக்கப் பயன்படுத்தப்படும் கடுமையான தண்டனையின் சின்னமாகும். கடுங்கோல் என்பது மக்கள்மீது செலுத்தப்படும் கொடுமையை அல்ல; சட்டமும் நீதியும் நிலைநாட்டப் பயன்படுத்தப்படும் வன்மையைச் சுட்டும் சொல்.
பாண்டியர்கள் பாண்டிய நாட்டின் பிள்ளைகள். அவர்கள் வெளிநாட்டவர் அல்ல; மக்களிடமிருந்து பிரிந்த ஆட்சியாளர்களும் அல்ல. மொழி, பண்பாடு, மரபு, நிலம் – அனைத்திலும் மக்களோடு ஒன்றிய அரச மரபே பாண்டிய மரபு. இத்தகைய அரசன் தனது சொந்த மக்களை கொடுமையாக ஆட்சி செய்தான் என்று கருதுவது வரலாற்று நியாயத்திற்கும் சமூக உண்மைக்கும் முரணானது.
கொடுமை என்ற சொல்லை நாம் யாருடன் பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற கேள்வி இங்கே எழுகிறது. களப்பிரர் ஆட்சிக்காலம் குறித்து பிற்கால செப்பேடுகள், இலக்கியங்கள் கூறுவது மரபு அரசாட்சிகள் அகற்றப்பட்டன, சமூக ஒழுங்கு சிதைந்தது, வைதிக வழிபாடுகள் ஒடுக்கப்பட்டன என்பதாகும். அதாவது, கொடுமை அனுபவித்தது மக்கள்; கொடுமை செய்தது களப்பிரர் ஆட்சி.
இந்தச் சூழலில்தான் கடுங்கோன் பாண்டியன் வரலாற்றுக் களத்தில் தோன்றுகிறான். அவன் காட்டிய கடுமை மக்கள்மீது அல்ல; கொடுமையான களப்பிரர் ஆட்சியின் மீதே. அநீதியை வேரோடு அகற்றுவதற்கு கடுமை அவசியமாக இருந்தது. அந்தக் கடுமையே அவனுக்கு “கடுங்கோன்” என்ற பட்டத்தை அளித்தது.
எனவே,
கடுங்கோன் என்ற பெயர்
– கொடுமையைச் செய்த அரசனின் அடையாளமல்ல
– கொடுமையை ஒழித்த அரசனின் அடையாளம்
கடுங்கோல் இல்லாமல் செங்கோல் நிலைபெறாது.
ஒரு நாட்டில் அநீதி உச்சம் அடையும் போது கடுங்கோல் தேவைப்படுகிறது; அநீதி அகற்றப்பட்ட பின் செங்கோல் நிலைபெறும். கடுங்கோன் பாண்டியன் களப்பிரர்களை வென்று பாண்டிய நாட்டை மீட்டெடுத்த பிறகே, தமிழகத்தில் மீண்டும் மரபு அரசாட்சியும் சமூக ஒழுங்கும் செங்கோல் ஆட்சியும் நிலைபெற்றன.
ஆகவே, “கடுங்கோன்” என்ற பட்டத்தை கொடுமையின் அடையாளமாகப் பார்ப்பது வரலாற்றுப் பிழை. அது அநீதிக்கு எதிரான நீதியின் வன்மை, பாண்டியர் மரபின் மறுஉயிர்ப்பு, மக்களுக்கான விடுதலை ஆகியவற்றின் சின்னமாகவே பார்க்கப்பட வேண்டும்.

#கடுங்கோன்
#கள்வர்கள்வன்

இங்ஙனம்
ஏஎஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்

உத்தமர்சீலி சோமசுந்தரம் முத்துராஜா அவர்கள் 74ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த சுமைதாங்கி!திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி கிராமத்...
07/01/2026

உத்தமர்சீலி சோமசுந்தரம் முத்துராஜா அவர்கள் 74ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த சுமைதாங்கி!

திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி கிராமத்தில் சோமசுந்தரம் முத்துராஜா அவர்களின் மனைவி லீலாவதி அமையாரின் நினைவாக அமைக்கப்பட்ட சுமைதாங்கிக் கல்.
கி.பி 1927ஆம் பிறந்த லீலாவதி அம்மையார் அவர்கள் கி.பி 1952-ஆம் ஆண்டு மறைந்துள்ளார்கள்.அவர்களின் நினைவாக திரு.சோமசுந்தரம் முத்துராஜா அவர்கள் இந்த சுமைதாங்கிக் கல்லை அமைத்துள்ளார்.இந்த சுமைதாங்கி இவர்களின் குடும்பத்தினர் வழிபாடு செய்கின்றனர்.மேலும் இந்த சுமைதாங்கி இருக்கும் சாலை வேலை செய்யும் போது அங்கிருந்து புடுங்கி ஓரமாக போடப்பட்டுள்ளது. பின்னர் லீலாவதி அம்மையார் அவர்களின் மகனின் கனவில் வந்து அதை சீர் செய்ய சொல்லியுள்ளார்.
அதனை ஏற்று அவர்களின் குடும்பத்தினர் இந்தசுமைதாங்கியை புதுப்பித்து தங்களின் குடும்ப தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

சுமைதாங்கிக்கல்;
சுமைதாங்கி என்பது, சுமைகளைச் சுமந்து செல்வோர் அதனைப் பிறர் துணையின்றிச் எளிதாக இறக்கி வைப்பதற்காகக் கட்டப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். சுமைதாங்கி பொதுவாகப் பாதை ஓரங்களில் அமைக்கப்படுகின்றது.
தொலைவிலுள்ள சந்தைகளுக்கு எடுத்துச் செல்வோரும், சந்தைகளில் வாங்கிய பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்வோரும் எனப் பல வகையானோர் நெடுந்தூரம் சுமைகளைச் சுமந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. தொலைதூரப் பயணம், யாத்திரை செல்பவர்களும், வேண்டிய பொருட்களைக் கால்நடையாகவே சுமந்து செல்வதுண்டு. சிறிது இளைப்பாறுவதற்காகச் சுமைகளை இறக்கி வைக்கவும் பின்னர் திரும்பவும் தூக்கவும் பிறர் துணை தேவைப்படும். இத் துணை எல்லா நேரங்களிலும் கிடைக்கும் என்பதில்லை. இவ்வாறான பிரச்சனையின்றித் தனியாகவே சுமைகளை இறக்கவும், திரும்ப அதிக எத்தனம் இன்றித் தூக்கியேற்றவும் வசதியாக உயரமான மேடை போல் அமைக்கப்படும் அமைப்பே சுமைதாங்கியாகும்.

முத்தரையர் சமுகத்தினர் ஏராலமான வரலாற்றுக்கு சொந்தகாரர்கள்.
முத்தரையர்களின் வரலாறுகளை உலகறிய செய்வோம்...

நன்றி

முத்தரையர் சமுக ஆய்வில்,
ஏஎஸ்.கலையரசன் அம்பலகாரர்
முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம்

Address

Tirumayam
622407

Alerts

Be the first to know and let us send you an email when முத்தரையர் வரலாறு ஆய்வுக்கூடம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category