Yaakkai

Call Directions Website Contact the museum

Yaakkai Interest to share our experience in this page... Yaakkai Charitable Trust, established in the year of 2017.

Intensity doing Research, Documenting, Create Awareness and Conservation of heritage sites in south India. We have a volunteers team of retired Archeological officers, Epigraphists, Language research fellows and interested students, youngsters to do effectively. It registered with Tamilnadu state government, (48/2020:IV/26) for strengthen heritage. This Yaakkai Charitable Trust hereafter referred as Yaakkai.

பொள்ளாச்சி என். ஜி. எம். கல்லூரியின் தமிழ்த்துறை ஒருங்கிணைப்பில் தொல்லியல் உரையரங்கம் நடைபெற்றது. யாக்கை அறக்கட்டளை சார்...
30/08/2026

பொள்ளாச்சி என். ஜி. எம். கல்லூரியின் தமிழ்த்துறை ஒருங்கிணைப்பில் தொல்லியல் உரையரங்கம் நடைபெற்றது. யாக்கை அறக்கட்டளை சார்பில் திரு சுதாகர் நல்லியப்பன் அவர்கள் தொல்லியல் அறிமுகம் எனும் தலைப்பிலும் திரு குமரவேல் இராமசாமி அவர்கள் யாக்கையின் கள ஆய்வு அனுபவங்கள் குறித்தும் உரையாற்றினர். இந்நிகழ்வில் தமிழ், கணிணி அறிவியல், பொருளாதாரம் பயிலும் இளங்கலை, முதுகலை, ஆய்வு மாணவர்கள் பங்கேற்றனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் தி.ஈ. மஞ்சுளவல்லி அவர்கள் தலைமையேற்று சிறப்புரை வழங்கினார்கள், தமிழ்த்துறை தலைவர் திருமிகு த. பரமேசுவரி அவர்கள் வரவேற்புரையும், தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் அ. ராஜா முகமது நன்றியுரை வழங்கினார்கள்.

கோவை, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை (18.08.2...
19/08/2026

கோவை, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை (18.08.2026) நடைபெற்றது. இக்கருத்தரங்கை தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரித் தமிழ்த்துறை மற்றும் யாக்கை அறக்கட்டளை இணைந்து நடத்தினர்.

விழாவில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அருளுரை வழங்கினார். கல்லூரி முதல்வர் கா. திருநாவுக்கரசு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.யாக்கை அறக்கட்டளை தலைவர் திருமிகு சுதாகர் நல்லியப்பன், தமிழ்த்துறை தலைவர் முனைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ப. சங்கீதா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கோவை, குமரகுரு கல்வி நிறுவனங்களின் நா. மகாலிங்கம் தமிழாய்வு மைய இயக்குநர் முனைவர் இரா. ஜெகதீசன் அவர்கள் 'தொல்லியல் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் மற்றும் வரலாற்றுக் காலம்' குறித்து சிறப்புரை ஆற்றினார்.

இக்கருத்தரங்கு மூன்று அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டது. முதலாம் அமர்வில் 'அண்மைக்காலத் தொல்லியல் அகழ்வாய்வுகள் காட்டும் கொங்கு நாட்டின் பண்டைய தொழிற்கூடங்களும் வணிகமும்' என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை உதவி இயக்குநர், முனைவர் கா. சுரேஷ் அவர்கள் கொடுமணல் முதலான தொல்லியல் இடங்களைக் குறிப்பிட்டு பொருண்மையுரை வழங்கினார்.

இரண்டாம் அமர்வில் 'தொல்லியலும் வரலாற்று எழுதியலும்' என்ற பொருண்மையில் மதுரை, வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழக நிறுவனர் முனைவர் பாவெல் பாரதி அவர்கள் தொல்லியல் ஆய்வு முடிவுகள் வரலாற்று எழுதியதில் செலுத்தும் தாங்கங்களை அண்மையை தொல்லியல் ஆய்வுகளுடன் இணைத்து உரையாற்றினார்.

மூன்றாம் அமர்வில் 'தொல்லியல்: இலக்கியம், வரலாறு, வழக்காறு' என்ற தலைப்பில் விருதுநகர், வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி, உதவிப்பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத்தலைவர் திருமிகு பெ.க. பெரியசாமி ராஜா அவர்கள் தொல்லியலுக்கும் இலக்கியம், வரலாறு நாட்டுப்புறவியல் மரபுகளுக்கும் இடையான உறவுகளை பண்பாட்டு நோக்கில் விளக்கி உரையாற்றினார்.

கல்லூரியின் சிதம்பர அடிகளார் நூலகத்தில் "தொல்லியல் கண்காட்சி" நிகழ்த்தப்பட்டது. அதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்பரப்பில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இறுதியாகப் பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. யாக்கை அறக்கட்டளை செயலர் திருமிகு குமரவேல் இராமசாமி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இப்பயிலரங்கில் கோவை ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலிருந்துபல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 310 பேரும் தமிழ்த்துறை மாணவர்கள் , ஆய்வாளர்கள் என 180 பேர் என மொத்தம் 490 பேர் கலந்து பயன்பெற்றனர்.

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி, பேரூர் தமிழ்த்துறை மற்றும் யாக்கை அறக்கட்டளை இணைந்து நடத்தும் ...
12/08/2026

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி, பேரூர் தமிழ்த்துறை மற்றும் யாக்கை அறக்கட்டளை இணைந்து நடத்தும் தொல்லியல் கருத்தரங்கில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கின்றோம்.

-தொல்லியலும் வரலாற்று எழுதியலும்

-தொல்லியல்: இலக்கியம், வரலாறு, வழக்காறு

-அகழாய்வு தொழிற்கூடங்கள், வணிகம்

மேற்கண்ட தலைப்புகளில் ஆய்வாளர்கள் உரையும் தொல்லியல் கண்காட்சியும் நடைபெறவுள்ளது.

மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் பயன்பெறும் நோக்கில் திட்டமிடப்பட்டிருக்கும் நிகழ்வு

நாள் : 18.08.2026*

இடம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி, பேரூர் -641010

பங்கேற்பாளர்களின் கவனத்திற்கு
பதிவுக் கட்டணம்
இளங்கலை, முதுகலை மாணாக்கர் ரூ.100/-
மற்றையோர் ரூ. 200/-
நிகழ்வன்று நேரில் தொகையாகப் பெற்றுக்கொள்ளப்படும்.
மதிய உணவு, தேநீர், எழுதுபொருள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்

*பதிவு செய்வதற்கான இணைப்பு*:

https://forms.gle/iz8GMF1ZSLPVLacw8

கோயமுத்தூர் புத்தகத் திருவிழா - 2026 உடன் இணைந்து யாக்கை அறக்கட்டளை நடத்திய தொல்லியல் விழிப்புணர்வுக் கண்காட்சி மாணவர்கள...
28/07/2026

கோயமுத்தூர் புத்தகத் திருவிழா - 2026 உடன் இணைந்து யாக்கை அறக்கட்டளை நடத்திய தொல்லியல் விழிப்புணர்வுக் கண்காட்சி மாணவர்கள், பொதுமக்கள், ஆர்வலர்களின் திரளான பங்கேற்புடன் இனிதே நடைபெற்று முடிந்திருக்கிறது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் தொல்லியல் சின்னங்களின் முக்கியத்துவம், பாதுகாப்பு அவசியம், பன்முகப் பரிமாணங்களைக் கொண்டு சேர்க்கும் வகையில் இந்நிகழ்வை யாக்கை திட்டமிட்டிருந்தது.

முப்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டனர். கல்லூரி மாணவர்களின் வருகையும் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது. கண்காட்சியைப் பார்வையிட்ட பொதுமக்களில் பலர் தங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் அழைத்து வந்துப் பார்வையிடச் செய்தார்கள்.

கண்காட்சியில் பார்வையாளர்களுக்கு தெளிவான விளக்கத்தை ஆய்வு மாணவர்கள் வழங்கினர். பேரூர் தமிழ்க் கல்லூரி மாணவர்கள், பாரதியார் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை மாணவர்கள் பல குழுக்களாகப் பங்கேற்று பார்வையாளர்களுக்கு விளக்கும் பணியினை தன்னார்வத்துடன் மேற்கொண்டனர். பேரூர் தமிழ்க் கல்லூரி முதல்வர் அவர்கட்கும் பாரதியார் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தலைவர் அவர்கட்கும் நம் நன்றி.

நண்பர்கள் பலரும் சமூக வலைதள பதிவுகள், குறுஞ்செய்திகள் வாயிலாக கண்காட்சி குறித்த செய்தியைக் கொண்டு சேர்த்து பலரையும் நேரில் பங்கேற்று பார்வையிட செய்துள்ளனர். அனைவருக்கும் நன்றி.

தொல்லியல் கண்காட்சிக்கு கல்வெட்டுப் படி, தொல்பொருட்கள், தகவல் பலகைகள் தந்து உதவிய விழுப்புரம் திருமிகு வீரராகவன் ஐயா, மங்கையர்க்கரசி அம்மா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

தொல்லியல் சின்னங்கள் குறித்த விழிப்புணர்வை பரவலாக்கும் நோக்கில், திரளான மக்கள் கூடுகை நிகழும் அறிவுத் திருவிழாவில் அரங்கம் அமைத்துத்தந்த கொடிசியா புத்தகத் திருவிழா - 2026 அமைப்பின் நிர்வாகிகள் அனைவருக்கும் யாக்கை தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

யாக்கை குழுவின் நண்பர்கள், தன்னார்வலர்கள் என பலரும் அரங்கிலிருந்து கண்காட்சியை சிறந்த முறையில் ஒருங்கிணைத்தனர், யாக்கை தன்னார்வலர்களுக்கு பாராட்டும் நன்றியும்.

தொல்லியல் கழகத்தின் 34 ஆம் ஆண்டு கருத்தரங்கில் யாக்கை குழு சார்பில் மூன்று ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டது. குமரவேல் இர...
23/07/2026

தொல்லியல் கழகத்தின் 34 ஆம் ஆண்டு கருத்தரங்கில் யாக்கை குழு சார்பில் மூன்று ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டது. குமரவேல் இராமசாமி அவர்கள் "நடுகல் சமூகத்தில் அதிகாரப் படிநிலைகள்" எனும் தலைப்பிலும் சுதாகர் நல்லியப்பன் அவர்கள் "சின்னாற்றுப் பள்ளத்தாக்கு தொல்லியல் வெளிகள்" எனும் தலைப்பிலும் வெங்கடேஷ் தனபால் அவர்கள் பர்கூர் மலை தொல்லியல் வெளிகள் எனும் தலைப்பிலும் கட்டுரைகளை வழங்கினர்.

குமரகுரு கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் தமிழகமெங்கும் இருந்து வந்திருந்த தொல்லியல் ஆய்வாளர்கள், தொல்லியல் கழக உறுப்பினரகள், மாணவர்கள் என பல தரப்பினரும் கலந்து கொண்ட நிகழ்வில் கட்டுரை வாசிக்க வாய்ப்புத் தந்த தொல்லியல் கழக நிர்வாகிகளுக்கு நம் நன்றி.

கோயமுத்தூர் புத்தகத் திருவிழாவில் நம் யாக்கை குழு ஒருங்கிணைத்து வரும் தொல்லியல் விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்வு இளைஞர்கள...
20/07/2026

கோயமுத்தூர் புத்தகத் திருவிழாவில் நம் யாக்கை குழு ஒருங்கிணைத்து வரும் தொல்லியல் விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்வு இளைஞர்கள்,பெரியவர்கள், பள்ளிக் கல்லூரி மாணவர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொல்லியல் சின்னங்கள் குறித்தும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து அனைவருக்கும் விளக்கங்கள் தரப்படுகின்றது.

யாக்கைக் குழு தன்னார்வலர்களின் முழு ஈடுபாட்டுடன் கூடிய இப்பணியை அனைத்துத் தரப்பினரும் பாராட்டித் தங்களது கருத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

பேரூர் தமிழ்க் கல்லூரி தமிழ்த்துறை மாணவர்கள், பாரதியார் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்களுக்கு பாராட்டுகள்.

இக்கண்காட்சி வரும் 26-07-2026 வரையில், அரங்கம் எண் 170 யில் நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அனைவரும் வருக.

தொல்லியல் கண்காட்சிகோயமுத்தூர் புத்தகத் திருவிழா - 2026 , யாக்கை அறக்கட்டளை இணைந்து நடத்தும் தொல்லியல் விழிப்புணர்வு கண்...
15/07/2026

தொல்லியல் கண்காட்சி

கோயமுத்தூர் புத்தகத் திருவிழா - 2026 , யாக்கை அறக்கட்டளை இணைந்து நடத்தும் தொல்லியல் விழிப்புணர்வு கண்காட்சி கொடிசியா தொழிற்காட்சி வளாகப் புத்தகக் கண்காட்சி அரங்கில் நடைபெற உள்ளது.

நாள்: 17-07-2026 முதல் 26-07-2026 வரையில்
நேரம்: காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை

தொல்லியல், வரலாறு, பண்பாட்டுச் சான்றுகள் குறித்து அறிந்துகொள்ள மாணவர்கள், ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அனைவரையும் கண்காட்சியைப் பார்வையிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

📞+91 9489663004

புரிந்துணர்வு ஒப்பந்தம் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, யாக்கை அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 07-07-2026 அன்ற...
08/07/2026

புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, யாக்கை அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் 07-07-2026 அன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் மைய நோக்கம் திறன் மேம்பாடு, தொல்லியல், கல்வெட்டியல், பழங்குடி ஆய்வுகள் தொடர்பான களங்களில் கல்லூரியின் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களுடன் இணைந்து செயல்படுவதாகும்.

மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்கும் நோக்கில் இலக்கிய மன்றம், படைப்பாளர் மன்றம் எனும் அமைப்பின் தொடக்க விழாவும் நடந்தேறியது. இந்நிகழ்வில் யாக்கை குழுவிலிருந்து திரு. சுதாகர் நல்லியப்பன், திரு. குமரவேல் இராமசாமி, திரு அருண் ராஜா மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். காலந்தோறும் தொல்லியலுக்கும் இலக்கியத்திற்குமான உறவுகள் எனும் தலைப்பில் மாணவர்களுடன் உரையாடலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர்கள், மாணவர்கள், இலக்கிய மன்ற நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

அன்பிற்குரிய கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் இராஜகோபால் சுப்பையா அவர்களுக்கு அஞ்சலி! யாக்கை நண்பர்கள் தொல்லியலில் ஆர்வத்துடன்...
02/07/2026

அன்பிற்குரிய கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் இராஜகோபால் சுப்பையா அவர்களுக்கு அஞ்சலி!

யாக்கை நண்பர்கள் தொல்லியலில் ஆர்வத்துடன் பயணிக்கத் தொடங்கிய காலத்தில் அரவணைத்து வழிகாட்டிவர். கல்வெட்டுக்களை வாசிக்கவும் அதனைப் பொருள் கொள்ளவும் வெளியிடவும் தேவையான நுணுக்கங்களை, தமது ஐம்பது ஆண்டுகால அனுபவத்தையும் சொல்லிக்கொடுத்து எங்களை இத்துறையில் வளர்த்தெடுத்தவர்.

யாக்கையின் புதிய கல்வெட்டுத் தொடர்பான ஒவ்வொரு வெளியீட்டிலும் ஐயா அவர்களது பங்களிப்பு உண்டு.
யாக்கை ஓர் அமைப்பாகத் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து நம்மீது பெரிதும் நம்பிக்கை கொண்டு, வெவ்வேறு களங்களில் நமது பணிகளை தொடர்ந்து வெகுவாகப் பாராட்டி வந்திருக்கிறார். தொடர்ந்து நெறிப்படுத்தி, வழிகாட்டி கல்வியாளர்கள் பலரும் பாராட்டும் அளவிற்கு நம் குழுவை வளர்த்தெடுத்தவர்.


அண்மையில் சென்னையில் நடைபெற்ற நூல் அறிமுகக் கூட்டத்தில் நம்முடனான பத்து ஆண்டுகால பயண அனுபவத்தையும், நமது ஆவணமாக்கல் பணியின் அவசியத்தையும் அவர் பகிர்ந்து கொண்டது, கல்வெட்டியலில் தொடர்ந்து செயலாற்றி அவருடைய நம்பிக்கையை காப்பாற்றும் வண்ணம் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொறுப்புணர்வை அதிகப்படுத்தியது.

மூத்தக் கல்வெட்டு ஆய்வாளர். தமிழின் அனைத்து வரிவடிவங்களையும் பிழையின்றி வாசிப்பவர். கிரந்தக் கல்வெட்டு வரிவடிவம் அச்சாக்கம்பெற கணிணி எழுத்துரு உருவாக்கத்திலும் பங்காற்றியுள்ளார். கல்வெட்டியலில் நூல்களாகவும் கட்டுரைகளாகவும் பல அறிய ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். கல்வெட்டு வாசிப்பை நூல் வாசிக்கும் பழக்கம்போல்@ மக்களின் வாசிப்பாக மாற்றியதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.

தொல்லியல் துறையில் இருந்து ஓய்வுப்பெற்ற பின்னர் தொல்லியல் கழகத்தின் பல்வேறு தன்னார்வப் பொறுப்புகளில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழ்க் கல்வெட்டுகளைப் பதிப்பித்து வெளிக்கொண்டு வந்துள்ளார். தமிழகத் தொல்லியல் வரலாற்றிற்கு பங்களித்தவர்களை காலக்கோட்டில் வரிசைப்படுத்தி எழுதும்போது, திருமிகு இராசகோபால் சுப்பையா எனும் அவர்தம் பெயர் 21 ஆம் நூற்றாண்டு தமிழ்ச்சான்றோர் பட்டியலில் முதன்மை வரிசையில் நிலைத்திருக்கும். ஐயா அவர்களுக்கு புகழஞ்சலி!.

த. மு. எ. க. ச அவினாசி கிளை முன்னெடுத்த நீலமலைத் தொல்லியல் நூல் அறிமுக நிகழ்வு கடந்த 24-05-2026 அன்று அவினாசி கோவம்ச திர...
27/05/2026

த. மு. எ. க. ச அவினாசி கிளை முன்னெடுத்த நீலமலைத் தொல்லியல் நூல் அறிமுக நிகழ்வு கடந்த 24-05-2026 அன்று அவினாசி கோவம்ச திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சூழலியலாளர் திரு. கோவை சதாசிவம் அவர்கள் தலைமை தாங்கி, சூழலியல் பார்வையில் தொல்லியலை ஆவணப்படுத்த வேண்டிய தேவையும் அதனை நீலமலைத் தொல்லியல் நூல் முன்னெடுத்திருப்பதையும் குறிப்பிட்டு செறிவானதொரு உரையை வழங்கினார்.

தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பாவெல் பாரதி அவர்கள், இந்நூலின் முடிவுகள் வழியாக எதிர்கால ஆய்வுலகிற்கு கிடைத்திருக்கும் கோட்பாட்டுத் தளங்களை எடுத்துரைத்து விரிவான ஆய்வுரையை வழங்கினார்.

கே. பி. ஆர். கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் திரு. லோகநாதன் அவர்கள் நீலமலைத் தொல்லியல் நூல் இயல் அடக்கத்தின் நேரடி, மறைமுகக் குறியீடுகளை நாம் விளங்கிகொள்ள வேண்டிய தளங்களைக் குறிப்பிட்டு தமது நூல் அறிமுவுரையை வழங்கினார்.

தமிழ்க் கல்லூரி மாணவர் திரு. ஆனந்த் அவர்கள் தொல்லியலின் அடிப்படைப் புரிதலை இந்நூல் விவரிக்கும் விதம் குறித்தும் நம் யாக்கை குழுவினரின் தொல்லியல் தேடல் குறித்தும் அவரது அனுபவப் பார்வையில் விவரித்தார். கல்வெட்டியல் மாணவியும் ஆசிரியருமான திருமிகு க. பரமேஸ்வரி அவர்கள் கள ஆய்வு அணுகுமுறையில் நீலமலைத் தொல்லியல் நூலின் பின்னுள்ள உழைப்பைக் குறிப்பிட்டு உரையாற்றினார்.

நூலாசிரியர்கள் குமரவேல் இராமசாமி, சுதாகர் நல்லியப்பன் ஆகியோர் ஏற்புரை வழங்கினார்கள். திருமிகு காயத்ரி அவர்கள் நன்றியுரை வழங்கினார், திருமிகு பத்மபிரியா அவர்கள் இந்நிகழ்வை வெகு நேர்த்தியாக ஒருங்கிணைத்தார்.

நீலமலைத் தொல்லியல் நூல் அறிமுக நிகழ்வை நன்முறையில் திட்டமிட்டு ஒருங்கிணைத்த த. மு. எ. க. ச. அவினாசி கிளையின் திரு. க. சம்பத்குமார் உள்ளிட்ட நண்பர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நம் நன்றிகள். எப்போதும் உடன் பயணிக்கும் யாக்கை நண்பர்களுக்கு நன்றி.

Address

Near SPK Enterprises, FCI Road, Opp. Rajagopal Transport, Varatharajulu Nagar, Ganapathy
Coimbatore
641006

Alerts

Be the first to know and let us send you an email when Yaakkai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to Yaakkai:

Shortcuts

Share