MGR Memorial HOUSE

MGR Memorial HOUSE MGR Memorial HOUSE is a personalia museum in which many of the rooms used by Dr.M.G.Ramachandran has

The sword at the feet of Mookambika Devi temple at Kollur gifted by Dr MGR.அண்ணாவின் ‘இதயக்கனி’யாக எம்.ஜி.ஆர் மாறியது எப...
26/03/2026

The sword at the feet of Mookambika Devi temple at Kollur gifted by Dr MGR.

அண்ணாவின் ‘இதயக்கனி’யாக எம்.ஜி.ஆர் மாறியது எப்படி?
https://thaaii.com/2024/07/19/script-about-anna-and-mgr-2/

எம்.ஜி.ஆரின் திரை உலக வாழ்க்கையில் மைல் கல்லாக அமைந்த திரைப்படம். ‘நாடோடி மன்னன்’. அதன் உருவாக்கத்தில் எம்.ஜி.ஆர். பட்ட சிரமங்கள் ஆயிரம் ஆயிரம்.

எம்.ஜி.ஆர்., நாடகக் கம்பெனி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவர் சொந்தமாக ‘எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ்‘ எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார்.

எம்.ஜி.சக்ரபாணி, அதன் பங்குதாரர். எம்.ஜி.ஆர்., நிர்வாகப் பங்குதாரர். அந்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட முதல் படம் தான் ‘நாடோடி மன்னன்‘.

படத்தை தொடங்கிய சமயத்தில் ‘1958-ம் ஆண்டு பிப்ரவரியில் படம் வெளியாகும்‘ என எம்ஜிஆர் அறிவித்து விட்டார். ஆனால் அந்த தேதியில் பாதிபடம் தான் வளர்ந்திருந்தது.

மாதங்கள் நகர்ந்தன. படப்பிடிப்பு நடந்து கொண்டே இருந்தது. படத்தின் வெளியீட்டுத் தேதிகள் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தன. பிரதான காரணம் - அப்போது கச்சா ஃபிலிமுக்கு நிலவிய கடுமையான தட்டுப்பாடு.

அதன் உண்மையான விலை, அதாவது மார்க்கெட் விலை எழுபது ரூபாய். ஆனால் வெளியில் 450 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி இருந்தது.

அந்த நேரத்தில் வேறு சில படங்களில் நடிக்கவும் எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் செய்திருந்தார். சில நாட்கள் அந்தp படங்களின் ஷுட்டிங் நடந்தது. நாடோடி மன்னனை உடனடியாக முடிக்க வேண்டி இருந்ததால், அந்தப் படங்களின் படப்பிடிப்புகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டன.

ஒரு வழியாக படம் முடிந்தது. 1958-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி வெளியானது. படம் வெள்ளி விழா கண்டது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ’நாடோடி மன்னன்’ வெற்றிவிழா கொண்டாட்டங்கள் நடந்தன.

மதுரையில் நடந்த விழாவில், மதுரை முத்து எம்ஜிஆருக்கு தங்கவாள் பரிசளித்தார். சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் அறிஞர் அண்ணா தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் படத்தில் பங்கேற்ற 150 கலைஞர்களுக்கு மோதிரம் அளிக்கப்பட்டது.

அந்த விழாவில் பேசியபோது தான், எம்ஜிஆரை ‘என் இதயக்கனி‘ என அண்ணா, குறிப்பிட்டார்.

‘மரத்தில் ஒரு கனி பழுத்துத் தொங்கி கொண்டிருந்தது - அது யாருடைய மடியில் விழுமோ என்று பார்த்துக் கொண்டிருந்தேன் - நல்ல வேளையாக அந்தக் கனி என்னுடைய மடியிலே வந்து விழுந்துவிட்டது - அந்தக் கனியை எடுத்து நான் பத்திரமாக என் இதயத்தில் வைத்துக் கொண்டேன்‘ என பலத்த கைத்தட்டலுக்கு மத்தியில் அறிஞர் அண்ணா தெரிவித்தார்.

அண்ணாவின் வார்த்தைகளுக்கு வடிவம் அளிக்கும் வகையில் சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்த படத்துக்கு ‘இதயக்கனி’ என பெயர் வைக்கப்பட்டது.

படம் ஆரம்பிக்கும்போது, அண்ணாவின் உருவத்தையும், அவர் இதயத்தில் எம்.ஜி.ஆர். இருப்பது போன்றும் காட்டி, அதன் மீது படத்தின் டைட்டிலான ‘இதயக்கனி’ போடப்பட்டது.

சத்யா மூவீசுக்கு எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்த கடைசி படம் ‘இதயக்கனி‘.

- பாப்பாங்குளம் பாரதி.

26/03/2026
வெற்றியையும் தோல்வியையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?https://thaaii.com/2025/01/20/interview-of-mgr-3/வெற்றியையும் த...
21/01/2025

வெற்றியையும் தோல்வியையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்?
https://thaaii.com/2025/01/20/interview-of-mgr-3/

வெற்றியையும் தோல்வியையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என எம்.ஜி.ஆர் கூறியது.

தொடர்ந்து இரண்டு படங்கள் அவருக்கு வெள்ளிவிழா கண்டன. அப்போது நிருபர் ஒருவர், “இதனை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு எம்.ஜி.ஆர்., “என்னைப் போன்றவர்களுக்கு வெற்றியும் தோல்வியும் ஒன்றுதான். வெற்றியைக் கண்டு கொஞ்ச நேரமாவது அசந்து நின்றுவிட்டோமானால், பெரிய தோல்வி ஒன்று பின்னால் காத்திருக்கிறது என்று பொருள்.

அதேபோல், தோல்வியைக் கண்டு மலைத்து நின்றுவிட்டோமானால், எனக்காகக் காத்திருக்கும் வெற்றியையும் இழந்துவிடுவேன்.

வெற்றியையும் தோல்வியையும் உருவாக்கிக்கொள்பவன் நானல்ல. எனவே, அதில் பங்கு கேட்கவும் எனக்கு உரிமை இல்லை” என்று சொன்னார்.

வாத்தியாரின் இந்தப் பாடம் போதுமே!

நன்றி: விகடன் பொக்கிஷம்.

#எம்ஜிஆர் #வெற்றி #தோல்வி

நீங்கா நினைவுகளுடன் வாழும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.!https://thaaii.com/2024/12/24/dr-mgr-37th-memorial-memorial-day/...
25/12/2024

நீங்கா நினைவுகளுடன் வாழும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.!
https://thaaii.com/2024/12/24/dr-mgr-37th-memorial-memorial-day/

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அவரது ரசிகர்கள், தொண்டர்கள், அபிமானிகள் எனப் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில், டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவர் முனைவர் குமார் ராஜேந்திரன், கல்லூரியின் தாளாளர் முனைவர் லதா ராஜேந்திரன், கல்லூரிப் பணியாளர்கள் எனப் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை, தியாகராயர் நகர், ஆற்காடு சாலையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆரின் நினைவில்லத்திலும் இதேபோல் மரியாதை செலுத்தினர். இதேபோல், எம்.ஜி.ஆருடன் திரைப்படங்களில் நடித்தவர்களும் அவரது தீவிர பற்றாளர்களுமான நடிகைகள் லதா, சச்சு உள்ளிட்டோரும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கும், அவரது திருவுருவச் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

#பொன்மனச்_செம்மல் #டாக்டர்_எம்ஜிஆர்_ஜானகி #முனைவர்_குமார்_ராஜேந்திரன் #முனைவர்_லதா_ராஜேந்திரன் #நடிகை_லதா #நடிகை_சச்சு #எம்ஜிஆர்

தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரான அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள் மிகக் குறுகிய காலம் மட்டுமே ஆட்சி செய்தாலும் பல்வேறு ...
02/12/2024

தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரான அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள் மிகக் குறுகிய காலம் மட்டுமே ஆட்சி செய்தாலும் பல்வேறு திட்டங்களை கையெழுத்திட்டு அமல்படுத்தியுள்ளார். அந்த நினைவுகளை அவரது பேரன், வழக்கறிஞர், முனைவர் குமார் ராஜேந்திரன் பகிர்ந்துள்ளார்.

நன்றி: OH தமிழ்.

எம்ஜிஆர் பேரன் INTERVIEW | எம்ஜிஆரின் நிறைவேறாத ஆசை | Janaki Ramachandran Centenary Webs...

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரும்  அன்னை ஜானகி அம்மாவும் அன்புமயமான புரிதலோடு கூடிய நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அந்த ந...
02/12/2024

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரும் அன்னை ஜானகி அம்மாவும் அன்புமயமான புரிதலோடு கூடிய நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அந்த நினைவுகளை அவரது பேரன், வழக்கறிஞர், முனைவர் குமார் ராஜேந்திரன் பகிர்ந்துள்ளார்.

நன்றி: OH தமிழ்.

எம்ஜிஆர் பேரன் INTERVIEW | எம்ஜிஆர் சுடப்பட்டவுடன் நடந்தது இதுதான் | Janaki Ramachandran Centenary ...

எம்.ஜி.ஆர். – சிலர் பார்க்க மறந்த பக்கங்கள்!https://cinirocket.com/script-about-ponmana-chemmal-mgr-3/எம்.ஜி.ஆர் ஒரு நடி...
12/11/2024

எம்.ஜி.ஆர். – சிலர் பார்க்க மறந்த பக்கங்கள்!
https://cinirocket.com/script-about-ponmana-chemmal-mgr-3/

எம்.ஜி.ஆர் ஒரு நடிகர் மட்டுமே, அவருக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி கேட்கும் போக்குதான் இன்றைக்குச் சில எழுத்தாளர்களிடம் நிலவுகிறது.

அப்படியானால், உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டதும், தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டதும், மதுரையில் தமிழன்னை சிலை நிறுவியதும் எம்.ஜி.ஆர் காலத்தில் தான் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை!

பெரியாருக்கு மட்டுமின்றி மகாகவி பாரதிக்கும் நூற்றாண்டுவிழா கொண்டாடியது எம்.ஜி.ஆர். அரசு தான்.

சுத்தானந்த பாரதி உள்ளிட்ட தமிழறிஞர்களுக்கு மாத உதவித்தொகை, மாவட்ட நூலகத் துறைக்குத் தனி அலுவலர்கள், அவர்களுக்கு ஓய்வூதியம் – இதெல்லாம் அளிக்கப்பட்டது எம்.ஜி.ஆர் ஆட்சியில்தான்.

தமிழக அரசின் ஆணைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணையிட்டதோடு, அரசின் மடல்கள், செய்திக் குறிப்புகள் போன்றவற்றில் திருவள்ளுவர் ஆண்டைப் பதிவு செய்ததும் எம்.ஜி.ஆரின் செயற்பாடுகள்தான்.

எம்.ஜி.ஆர். எழுத்தாளர் இல்லை; கண்டுபிடிப்பாளர் இல்லை. ஆனால், தமிழ் வளர்ச்சிக்கும், தமிழருக்கும், தமிழ் நாட்டிற்கும் அவரது ஆட்சி எண்ணற்ற பயனும், வளமும் தந்தது என்பதை மறுக்க முடியாது.

நன்றி: செ.இளவேனிலின் ‘அரசியலர்கள் மீது ஏன் எழுத்தாளர்களுக்கு வெறுப்பு?’ எனும் கட்டுரையிலிருந்து.

#எம்ஜிஆர் #ஆட்சி #அரசியல் #எழுத்தாளர்கள் #அரசு #உலகத்_தமிழ்_மாநாடு #மகாகவி_பாரதி #நூற்றாண்டுவிழா #தமிழன்னை_சிலை #பெரியார் #தமிழறிஞர்கள்

எம்.ஜி.ஆரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகப் பார்த்த தாய்மார்கள்!https://cinirocket.com/rare-photo-of-mgr-with-director-pa-nee...
19/10/2024

எம்.ஜி.ஆரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகப் பார்த்த தாய்மார்கள்!
https://cinirocket.com/rare-photo-of-mgr-with-director-pa-neelakandan/

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் இடம்பெற்ற "பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?..." பாடல் காட்சி வைகை அணையில் படமாக்கப்பட்டது.

அப்போது எம்.ஜி.ஆரைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். தன்னைக் காண வந்த மக்கள் தாகத்தில் தவிக்கக் கூடாது என்று தனது செலவில் 2 லாரிகளில் பெரிய கேன்களில் தண்ணீரும் மோரும் கொண்டு வரச்சொல்லி திரண்டிருந்த மக்களுக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தார் எம்.ஜி.ஆர்.

பயங்கரக் கூட்டம், எந்தப் பக்கம் திரும்பினாலும் மக்கள் தலைகள். பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

எம்.ஜி.ஆரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை மீறி ஒரு மூதாட்டி எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கே வந்துவிட்டார்.

அவரிடம் பரிவோடு பேசிய எம்.ஜி.ஆர்., அவரது குடும்பம் குறித்து விசாரித்தார்.

‘‘உங்களுக்கு பிள்ளைகள் இருக்காங்களாம்மா?’’

‘‘இருக்காங்கப்பா’’ என்று பதிலளித்த மூதாட்டியிடம், ‘‘என்ன பண்றாங்க?’’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘‘ஒரு புள்ள பட்டாளத்துல இருக்கு. இன்னொரு புள்ள சினிமாவுல இருக்கு’’ மூதாட்டியின் இந்தப் பதிலால் எம்.ஜி.ஆருக்கு வியப்பு.

சினிமாவில் இருக்கிறார் என்றால் நிச்சயம் தனக்குத் தெரிந்திருக்கும் என்று எண்ணியபடியே கேட்டார்…

‘‘சினிமாவில் இருக்கும் பிள்ளையின் பெயர் என்ன?’’

‘‘நான் பெறாத அந்தப் புள்ள நீதாம்பா’’ பதிலளித்த அந்தத் தாயின் கண்கள் மட்டுமல்ல; அவரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆரின் கண்களும் பனித்தன.

(புகைப்படத்தில் வைகை அணையில் தன்னைக் காணத் திரண்ட மக்கள் கடலைப் பார்க்கிறார் மக்கள் திலகம். அருகே இடுப்பில் கைவைத்தபடி இயக்குநர் ப.நீலகண்டன்)

படம் உதவி: ஞானம்.

#எம்ஜிஆர் #ஜெயலலிதா #மாட்டுக்கார_வேலன் #பாடல்_காட்சி #படப்பிடிப்பு #வைகை_அணை #மக்கள் #மூதாட்டி #சினிமா #இயக்குநர்_ப_நீலகண்டன்

எம்.ஜி.ஆர். என்ற மகா மனிதரைச் சந்தித்தேன்!கவியரசர் கண்ணதாசன்https://thaaii.com/2024/10/17/kaviarasar-kannadhasan-telling...
17/10/2024

எம்.ஜி.ஆர். என்ற மகா மனிதரைச் சந்தித்தேன்!
கவியரசர் கண்ணதாசன்
https://thaaii.com/2024/10/17/kaviarasar-kannadhasan-telling-about-mgr/

1980 ஆம் ஆண்டு மே மாதம்.

தமிழகத்தில் அப்போது தான் எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டிருந்தது.

கலைத்தவர் இந்திராகாந்தி.

சளைக்கவில்லை எம்.ஜி.ஆர். இடதுசாரிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டு 129 தொகுதிகளில் வெற்றி.

மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக முதல்வர் ஆனார் எம்.ஜி.ஆர்.

அதற்கான தேர்தல் வேலைகளில் எம்.ஜி.ஆர். இருந்தபோது அவரைச் சந்தித்த கவிஞர் கண்ணதாசன், அந்த அனுபவத்தை அப்போது வார இதழ் ஒன்றில் எழுதிக் கொண்டிருந்த 'சந்தித்தேன்.. சிந்தித்தேன்' தொடரில் எழுதினார்.

அந்த அனுபவம் உங்களுடைய பார்வைக்கு :

“புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.”

“அவர் உற்சாகமாக இருக்கிறார். சிரித்த முகத்தோடிருக்கிறார். திடகாத்திரமாகவும், சுறுசுறுப்போடும் இருக்கிறார், முன்பைவிடப் பளபளப்பாக இருக்கிறார்.

மதுரையில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு சென்னை வந்த எம்.ஜி.ஆரை இன்று (ஞாயிற்றுக் கிழமை) ஆற்காடு முதலி தெருவில் சந்தித்தபோது, நான் ஆச்சர்யப்படவில்லை.

சுமார் ஒன்றரை மணி நேரம் என்னோடு அவர் பேசிக் கொண்டிருந்தார். அதிலே தன்னம்பிக்கையின் உச்சக்கட்டம் தெரிந்தது.

நியாயம்தான். தமிழ்நாடு பூராவிலும் அவர் மீது ஓர் அனுதாபம் இருக்கிறது.

“நாங்கள் இந்திரா வரவேண்டும் என்று விரும்பினோமே தவிர, எம்.ஜி.ஆர் போக வேண்டும் என்று விரும்பவில்லை” என்பது ஏழை எளிய மக்களின் வாதம்.

“டில்லிக்கு இந்திரா, நம் ஊருக்கு எம்.ஜிஆர்” என்றே எங்கே பார்த்தாலும் பேசுகிறார்கள்.

அதை நேரிலேயே கேட்டு, மக்கள் வெள்ளத்தைச் சந்தித்துத் திரும்பிய அவர், நாணயமான நடத்தையை இந்த நாட்டு மக்கள் மதிக்கிறார்கள் என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார்.

அவரைவிட்டு விலகிச் சென்றவர்கள் கூட அவரைப் பற்றி எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லையே!

சட்டசபை கலைக்கப்பட்டதிலிருந்து நேற்று வரை நான் எம்.ஜி.ஆரைச் சந்திக்கவில்லை. காரணம் இந்திரா காங்கிரசோடு கூட்டு வைத்துக் கொள்ளும் வாய்ப்பை அவர் தவற விட்டதில் எனக்கு வருத்தம் இருந்தது.

ஆனால் நான் அவர் மீது காட்டிய பகையையும், அவர் என் மீது காட்டிய அன்பையும் எப்படி மறக்க முடியும்? ஆகவே இன்று அவரைச் சந்தித்தேன்.

குறைந்தபட்சம் 135 இடங்களை அ.தி.மு.க பெறும் என்று அவர் நம்புகிறார்.

நாட்டு மக்கள் ஓட்டுப் போடக் கற்றுக் கொண்டுவிட்டார்கள். இனி அவர்கள் மனோபாவத்தைக் கணிப்பது கடினமான காரியமல்ல.

வங்காளத்தையும், கேரளாவையும் போல அவருக்குப் பத்து, இவருக்குப் பத்து என்ற நிலைமை எப்போதுமே தமிழ்நாட்டில் இல்லை.

ஓட்டுச் சீட்டை ஒரே மாதிரிப் போட்டு ஒரு கட்சியை மெஜாரிட்டிக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள்.

நிர்வாகத் திறமையில் எம்.ஜி.ஆர் ஒரு சர்ச்சிலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஜனங்களின் மனோபவத்தைக் கணிப்பதில் எப்போதுமே அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

அவர் என்னிடம் அரசியலைப் பற்றி ஏதும் அலட்டிக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக என்னோடு வந்திருந்த என் மகன் கலைவாணனுக்கு ஒரு மணி நேரம் புத்திமதிகளைக் கூறினார்.

சினிமாவில் நடிக்கும் கலைவாணன் உடம்பை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் சில ஆசனங்களைச் செய்து காட்டினார்.

கலைத்துறையில் அரை நூற்றாண்டாக வளர்ந்து கொண்டிருக்கும் அவர், உடம்பைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் முறை கண்டு என் மகனே கூட ஆச்சர்யமடைந்தான்.

தேர்தல் சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில் அது பற்றிப் பரபரப்பே கொஞ்சம் கூட அவரிடம் காணப்படவில்லை.

“வெறும் கறி, மீனிலே உடம்பைக் காப்பாற்ற முடியாது. கீரை வகைகள் நிறையச் சாப்பிடு” என்றார் அவர்.

இடையிடையே வருகிற டெலிபோன் கால்களுக்கு அமைதியாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரிடம் நிதி கொடுப்பதற்கென்றே, ஒரு பெருங்கூட்டம் காத்துக் கொண்டிருந்தது.

நான் மதுரை வீரனையோ, மன்னாதி மன்னனையோ, ராஜா தேசிங்கையோ, நாடோடி மன்னனையோ சந்திக்கவில்லை. மக்களின் விசுவாசத்துக்குப் பாத்திரமான ஒரு மகா மனிதனைத் தான் அப்போது சந்தித்தேன்.

‘எழுதினால் கண்ணதாசன் தான் எழுத வேண்டும்’ என்று அவர் சொன்ன காலங்களும் உண்டு.

‘கண்ணதாசன் எழுத வேண்டாம்’ என்று மறுத்த காலங்களும் உண்டு. ஆனால் கவிதையில் அவர் என்னை ரசித்ததைப் போல, யாரையும் ரசித்ததில்லை.

‘எதிரி என்றால் எதிரி; நண்பன் என்றால் நண்பன்’ என்பதுவே அவரது கொள்கை. நண்பன் என்று சொல்லிக் கொண்டு முதுகிலே குத்தும் பழக்கம் அவருக்கு இல்லை.

ஒரு படத்தில் அவருக்காக நான் வசனம் எழுதினேன்.

“என்னை நம்பாமல் கெட்டவர்கள் உண்டே தவிர, நம்பிக் கெட்டவர்கள் இல்லை” என்று.

அது இன்று பலிக்கிறது.

நம்பாமல் சென்று விட்டவர்கள் இன்று அஞ்ஞாத வாசம் செய்கிறார்கள். நம்பித் துணை நிற்போர், நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அவருடைய ஜாதகம் அசுர ஜாதகம், விழுவது போல் தெரியும், எழுந்து விடுவார். நீண்டகால வீழ்ச்சியை அவர் சந்தித்ததே இல்லை.

தமிழர்கள், அவரைத் ‘தமிழன்’ என்றே அறிவார்கள். அவரை வேறு பாஷைக்காரர் என்றோ, கப்பல் பேரத்தில் ஊழல் செய்தவர் என்றோ சொல்லப்படுவதை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

நாட்டு மக்கள் முழுக்க முழுக்க அரசியல் தெளிவு பெற்றுவிட்ட நேரத்தில், இந்தத் தேர்தல் நடக்கிறது.

தேர்தல் அறிக்கைகளும், விதவிதமான சுவரொட்டிகளும், மேடை முழக்கங்களும் வெறும் தேர்தல் காலக் கடமைகளே! அவற்றைப் பார்த்துவிட்டோ, கேட்டுவிட்டோ மக்கள் ஓட்டுப் போடுவதில்லை.

கம்யூனிஸ்டுகளும், முக்குலத்தோரும், நெடுமாறனும் செல்வாக்குப் பெற்ற மதுரையைத் தேர்ந்தெடுத்ததிலிருந்து அவரது ஆழ்ந்த அறிவு தெரியவில்லையா?

‘இந்திராவா, எம்.ஜி.ஆரா?’ என்று வந்தபோது மக்கள் இந்திராவைத் தேர்ந்தெடுத்தார்கள்.

எம்.ஜி.ஆரா, தி.மு.க வா என்று வரும் போது…

பொறுத்திருந்து பார்ப்போம்.”

நன்றி : ‘சந்தித்தேன்.. சிந்தித்தேன்’ – கவிஞர் கண்ணதாசனின் நூலில் இருந்து…

கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.

#சந்தித்தேன்_சிந்தித்தேன்_நூல் #கண்ணதாசன் #எம்ஜிஆர் #அதிமுக #இந்திராகாந்தி #கண்ணதாசன் #புரட்சித்தலைவர்_எம்ஜிஆர்

53-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள அதிமுக!அணிகள் ஒன்றிணைய தொண்டர்கள் விருப்பம்https://thaaii.com/2024/10/17/admk-53rd-i...
17/10/2024

53-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள அதிமுக!
அணிகள் ஒன்றிணைய தொண்டர்கள் விருப்பம்
https://thaaii.com/2024/10/17/admk-53rd-inauguration-ceremony/

‘கணக்கு‘ கேட்டதற்காக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி அதிமுக எனும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கினார். கட்சித் தொடங்கிய ஆறு மாதத்தில் திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலை அதிமுக எதிர்கொண்டது.

இடைத்தேர்தல் முடிவு 1973-ம் ஆண்டு மே 21-ம் தேதி வெளியானது. தேர்தல் முடிவு, இந்திய துணைக் கண்டத்தையே ஆச்சர்யப்படுத்தியது.

அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட மாயத்தேவர் வெற்றி பெற்றார். இரட்டை இலையின் சகாப்தம் அன்று ஆரம்பித்தது. அடுத்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தான் என அப்போதே அரசியல் நோக்கர்கள் கணித்து விட்டனர்.

அடுத்த சாதனையாக, 1974-ம் ஆண்டு கோவை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றிப் பெற்றது.

அங்கு வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் அரங்கநாயகம், அ.தி.மு.க.வின் முதல் எம்எல்ஏவாக சட்டப் பேரவைக்குள் நுழைந்தார். இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வென்று, ஆட்சியைக் கைப்பற்றியது.

1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. மொத்தம் 4 அணிகள். அதிமுகவுடன் சிபிஎம் மட்டும் கூட்டணி.

அப்போது, இரவு பத்து மணிக்குள் தேர்தல் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு ஏதும் இல்லை.

எம்ஜிஆர் நள்ளிரவு தாண்டி பரப்புரை நிகழ்த்த வந்தாலும், ஒட்டுமொத்தக் கூட்டமும் காத்திருக்கும்.

அந்தத் தேர்தலில் அதிமுக 130 தொகுதிகளைக் கைப்பற்றியது. கட்சி தொடங்கிய நான்கு ஆண்டுகளுக்குள் ஆட்சியைப் பிடித்த புதிய வரலாறு அதிமுகவால் எழுதப்பட்டது. எம்ஜிஆர், முதன் முறையாக முதலமைச்சர் ஆனார்.

1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, 129 இடங்களைக் கைப்பற்றியது. மீண்டும் எம்ஜிஆர் முதலமைச்சர் ஆனார்.

முகம் காட்டாமல் எம்.ஜி.ஆர் அடைந்த வெற்றி:

1984-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலும், மக்களவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. அப்போது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனால் அந்த தேர்தலில் எம்.ஜி.ஆரால் பிரச்சாரம் செய்ய இயலவில்லை. மருத்துவமனையில், தொப்பியில்லாத நிலையில் தோற்றமளிக்கும் எம்ஜிஆரின் சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன.

எம்ஜிஆர் நேரடியாக பரப்புரையில் ஈடுபடாத சூழலில், அந்த தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்றது. 132 இடங்களை கைப்பற்றியது அதிமுக. மூன்றாம் முறையாக முதலமைச்சர் ஆனார் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் 1987-ம் ஆண்டு உயிரிழந்தார். எம்ஜிஆர் மறைந்த நிலையில் அதிமுக இரண்டாகப் பிளவுபட்டது.

இதனைத் தொடர்ந்து 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், கட்சியின் வாக்குகள் பிரிந்ததால் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. பின்னர் இரு அணிகளும் ஒன்றிணைந்தன.

1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக 164 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்.

1996-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றாலும், 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வென்றது.

இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு 132 தொகுதிகள் கிடைத்தன. எனினும் 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. 61 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் அபார வெற்றி பெற்றது. 150 இடங்களில் வென்றது.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், கூட்டணி இல்லாமல், தனித்து களம் இறங்கிய அதிமுக, 136 இடங்களில் வெற்றி பெற்றது.

ஒன்றிணைய விரும்பும் தொண்டர்கள்

ஜெயலலிதா உடல் நலக்குறைவால் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இயற்கை எய்தினார். இதனால் அதிமுகவில் உள்கட்சி மோதல் எழுந்ததால், 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 66 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்திலும் அதிமுகவால் வெல்ல இயலவில்லை.

இந்த சூழலில்தான் அதிமுக இன்று 53-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று இன்றைக்கு ஆளுமைகள் இல்லை.

ஒரு மக்கள் இயக்கம், ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், பல பிரிவுகளாகச் சிதறி இருக்கும் எம்,ஜி.ஆரின் விசுவாசிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே புரட்சித் தலைவரின் தொண்டர்கள் விருப்பம்.

- மு.மாடக்கண்ணு.

#அதிமுக #புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் #திமுக #இரட்டை_இலை #அமெரிக்கா #புரூக்ளின்_மருத்துவமனை #ஜெயலலிதா

அன்பைப் பொழிவதில் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணை கிடையாது!சிவாஜி பெருமிதம்https://thaaii.com/2024/10/10/mgr-has-no-equal-in-show...
10/10/2024

அன்பைப் பொழிவதில் எம்.ஜி.ஆருக்கு ஈடு இணை கிடையாது!
சிவாஜி பெருமிதம்
https://thaaii.com/2024/10/10/mgr-has-no-equal-in-showering-love/

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். குறித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி:

“அண்ணன் எம்.ஜி.ஆரும் நானும், அப்போதும் சரி, இப்போதும் சரி, எந்த இடத்தில் இருந்தாலும், அரசியல் காரணமாக வேறுவேறு பாதையில் பயணித்தாலும், எப்போதாவது திடீரென சந்தித்துக் கொண்டால், கண்களில் அன்பைத் தேக்கிக் கொண்டு, இருவரும் சிறிது நேரம் எங்களையே மறந்து விடுவோம். அந்த நிலையை யாரால் விளக்க இயலும்?

அண்ணனைப் (எம்.ஜி.ஆர்) போல் நானும், என்னைப் போல் அண்ணனும் தாய்ப் பாசத்தில் அதீத பற்று கொண்டவர்கள். தாய்ச் சொல்லைத் தட்டாதவர்கள். தாய் கிழித்த கோட்டைத் தாண்டாதவர்கள். தாயைத் தெய்வமாக மதிப்பவர்கள்.

கல்விக்குப் பலர் இலக்கணம் வகுத்துள்ளனர். நாங்கள் நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள்.

நாடகத்தில் நடிப்பதற்காக நான் சென்னைக்கு வந்த பிறகு, எனக்கும் அண்ணனுக்கும் நெருக்கமான உறவு உண்டானது.

அப்போது வால் டாக்ஸ் சாலையின் முனையில் ஒரு பெரிய கட்டிடம். அதில்தான் நான் தங்கி இருந்தேன்.

அதே தெருவில் நாலு வீடு தள்ளி அண்ணன் (எம்.ஜி.ஆர்) வீடு. அப்போது அவர் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தார்.

காலை டிபன் அவரோடுதான். இரவில் எனக்கு ‘டிராமா’ முடிந்ததும் இருவரும் சினிமாவுக்குப் போவோம்.

அப்போது அண்ணனுக்கு தலை நிறைய அடர்ந்த கேசம் இருக்கும்.

அதனால் தலையில் முண்டாசுக் கட்டிக்கொண்டு, வேட்டியையும் வரிந்து கட்டிக்கொண்டு வருவார்.

சினிமா பார்த்து விட்டு, இரவில் ஒரு மணிவாக்கில், மிண்ட் தெருவில் உள்ள சேட் பால்கடைக்குப் போய் பால், சப்பாத்தி சாப்பிடுவது வழக்கம். எல்லாம் அண்ணன் செலவுதான்.

அப்போது அண்ணன் நிறைய காசு வைத்திருப்பார். அப்போதே, பிறருக்கு உதவி செய்யும் வழக்கம் அண்ணனுக்கு அதிகம்.

சாதாரணமாக இருக்கும்போதே நண்பர்களுக்கு நிறைய செலவு செய்வார். வசதி வாய்ப்புகள் பெருகிய நிலையில், எவ்வளவு செலவு செய்திருப்பார் என எண்ணிப் பாருங்கள்.

இந்த மாதிரி வளர்ந்தது எங்கள் நட்பு. அன்பை பொழிவதில் அண்ணனுக்கு ஈடு இணை கிடையாது.

எனக்கு 1952 ஆம் ஆண்டு கல்யாணம் நடந்தது. அந்த திருமணத்தில் எல்லோருக்கும் சாப்பாடு போட்டு கவனித்துக் கொண்டவர் அண்ணன்தான்.

என்னையும், என் மனைவியையும் உட்கார வைத்து சாப்பாடு போட்டவரும் அண்ணன்தான். அதன் பிறகு எங்கள் குடும்ப நெருக்கம் அதிகமானது.

நான் சினிமாவுக்குள் வந்த பிறகு, அந்த நெருக்கம் மேலும் இறுகியது. அன்னை சத்யாவை காணாமல் நான் இருக்க மாட்டேன்.

அதேபோல் அண்ணனின் தாயார் சத்யாவும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார்.

அண்ணனும் எனது அன்னை ராஜாமணியை பார்க்காமல் இருக்க மாட்டார்.

ராஜாமணி அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்றால், தனது உடம்புக்கு பாதிப்பு வந்த மாதிரிதான் அண்ணன் இருப்பார்.

மற்றவர்கள் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால், அது தனது குடும்பத்து சிக்கல் போல் கருதி, அதனைத் தீர்க்க முயல்வார் அண்ணன் எம்.ஜி.ஆர்.”

இப்படி, தனது மனதில் உள்ள எம்.ஜி.ஆர். குறித்த மலரும் நினைவுகளை, சிவாஜி பகிர்ந்துள்ளார்.

- பாப்பாங்குளம் பாரதி

#அண்ணன்_எம்ஜிஆர் #எம்ஜிஆர் #சிவாஜி #நடிகர்_திலகம் #புரட்சித்_தலைவர் #அன்னை_சத்யா #ராஜாமணி_அம்மையார் #கூண்டுக்கிளி #நாடகம் #சினிமா #சென்னை #அன்பு #சகோதரத்துவம் #நட்பு

நடிகரின் ரசிகர் மன்றத்தை பிரதமர் திறந்து வைத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு மட்டுமே!https://thaaii.com/2024/10/04/article-about...
04/10/2024

நடிகரின் ரசிகர் மன்றத்தை பிரதமர் திறந்து வைத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு மட்டுமே!
https://thaaii.com/2024/10/04/article-about-mgr-and-kalaivanar-2/

எம்ஜிஆர் அறிமுகமான ‘சதி லீலாவதி’ படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்துள்ளார். தொழில் முறையிலும் வயதாலும் எம்.ஜி.ஆருக்கு மூத்தவர்.

ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆருக்கு பல வகைகளில் உதவியதோடு, படங்களில் வாய்ப்பு கிடைக்க சிபாரிசும் செய்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் உதவும் குணமும், இளகிய நெஞ்சமும், நகைச்சுவை உணர்வும் அனைவரும் அறிந்ததுதான்.

ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை அவரது வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார்.

அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார். வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார். ஏன் மறுபடியும் பணம் கொடுக்கிறார் என்று அந்தப் பெண் புரியாமல் பார்த்தார்.

என்.எஸ்.கிருஷ்ணன் சிரித்தபடியே நிதானமாகச் சொன்னார். ‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன்னைப் பார்த்து நான் இரக்கப்பட்டதற்கு, இப்போது கொடுத்த பணம் உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம்.

தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.

என்.எஸ்.கிருஷ்ணனை தனது ஆசான்களுள் ஒருவராக கருதிய எம்.ஜி.ஆருக்கும் ஒருமுறை இதே போன்ற அனுபவம். அவர் முதல்வராக இருந்தபோது ஒரு பெண் கர்ப்பிணியாக இருப்பதாக கூறி உதவி கேட்டு வந்தார். எம்.ஜி.ஆரும் அவர் கேட்ட உதவியை செய்துள்ளார்.

வாங்கிக் கொண்டு அந்தப் பெண் வெளியேறும்போது எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் அந்தப் பெண் நடிப்பதை கண்டுபிடித்துவிட்டனர்.

ஆனாலும் அந்தப் பெண் மன்னித்து அனுப்பப்பட்டார். அவர் சென்ற பிறகு கலைவாணர் வாழ்வில் நடந்த மேலே கூறப்பட்ட சம்பவத்தை உதவியாளர்களிடம் சொல்லி சிரித்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

தனக்கு ஆசான் போல இருந்த என்.எஸ்.கிருஷ்ணன், கடைசி காலத்தில் வறுமையால் வாடி நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவருக்கு நிறைய உதவிகளை எம்.ஜி.ஆர். செய்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணனை எம்.ஜி.ஆர். சென்று பார்த்தார். யாரிடமும் எந்த உதவியும் கேட்க மாட்டார் கிருஷ்ணன்.

அதற்காக எம்.ஜி.ஆர். சும்மா இருந்து விடுவாரா? அவரால் கொடுக்காமல் இருக்க முடியாதே? என்.எஸ்.கிருஷ்ணன் படுத்துக் கொண்டிருந்த கட்டிலில் தலையணைக்கு அடியில் பணக்கட்டுகளை வைத்துவிட்டு வருவார் எம்.ஜி.ஆர்.

என்.எஸ்.கிருஷ்ணன் மறைந்த பின் நாகர்கோயிலில் அவரது வீடு ஏலத்துக்கு வந்தபோது அதை மீட்டு மீண்டும் அவர்கள் குடும்பத்தினருக்கே எம்.ஜி.ஆர். கொடுத்தார்.

என்.எஸ்.கிருஷ்ணனின் பிள்ளைகள் எல்லோரையும் படிக்க வைத்தார். அவரது மகள் திருமணத்தை தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார்.

‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் என்.எஸ்.கிருஷ்ணனும் நடித்தார். ஆரம்பத்தில் இருவருக்கும் போட்டி பாட்டு ஒன்று இருக்கும். அதிலே பல அரிய கருத்துக்கள் கேள்வி பதில் பாணியில் அமைந்திருக்கும்.

என்.எஸ்.கிருஷ்ணனை பார்த்து எம்.ஜி.ஆர். கேட்கும் ஒரு கேள்வி..

‘‘புகையும் நெருப்பில்லாமல் எரிவது எது?’’

பதில் சொல்லத் தெரியாமல் என்.எஸ்.கிருஷ்ணன் தவிப்பதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரே பதிலளிப்பார்...

‘‘பசித்து வாடும் மக்கள் வயிறு அது...”

உடனே, ‘‘சரிதான் சரிதான்....’’ என்று ஆமோதிப்பார் என்.எஸ்.கிருஷ்ணன்.

புகையும் நெருப்பும் இல்லாமல் பசியால் எரிந்த ஆயிரக்கணக்கான வயிறுகளை உணவு என்னும் தண்ணீர் ஊற்றி குளிர்வித்தவர் எம்.ஜி.ஆர்.

நடிகர்களைக் கூத்தாடிகள் என்று சமூகம் கேலியாக பேசி வந்த காலத்தில், எம்.ஜி.ஆரால் நடிகர்களுக்கு அந்தஸ்தும் கவுரவமும் கிடைத்தது.

1965-ம் ஆண்டு அந்தமானில் அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியால் ‘பணத்தோட்டம்’ எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம் திறந்து வைக்கப்பட்டது. ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தை நாட்டின் பிரதமர் திறந்து வைத்த பெருமை எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு.

நன்றி: தி இந்து.

#எம்ஜிஆர் #என்எஸ்கிருஷ்ணன் #சக்கரவர்த்தி_திருமகள் #பணத்தோட்டம் #எம்ஜிஆர்_ரசிகர்_மன்றம் #கலைவாணர் #என்எஸ்கே

Address

18 ARCOT MUDALI Street
Chennai
600017

Opening Hours

Monday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919841687204

Alerts

Be the first to know and let us send you an email when MGR Memorial HOUSE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to MGR Memorial HOUSE:

Share

Category

MGR MEMORIAL HOUSE

MGR MEMORIAL HOUSE was the rented official residence of the Late Chief Minister of Tamil Nadu Dr.M.G.Ramachandran from 1977 till his demise in 1987. After his demise it was converted into a memorabilia museum and is open for visitors from 9 AM to 5 PM on all days except Tuesdays. The museum is maintained by MGR CHARITIES led by the Managing Trustee Mr.Kumar Rajendran