விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள்

  • Home
  • India
  • Villupuram
  • விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள்

விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் விழுப்புரம் மண்ணின் வரலாறு பேசுவோம்...

விழுப்புரத்தில் இன்று காலை 7.30 மணிக்குப் பேருந்தில் புறப்பட்டு, 8.15 மணிக்குக் கூட்டேரிப்பட்டுச் சென்றடைந்தேன். அங்குத்...
08/08/2026

விழுப்புரத்தில் இன்று காலை 7.30 மணிக்குப் பேருந்தில் புறப்பட்டு, 8.15 மணிக்குக் கூட்டேரிப்பட்டுச் சென்றடைந்தேன்.

அங்குத் தயாராக நின்றிருந்த நண்பர் சமயம் கோபாலுடன் இருசக்கர வாகனத்தில் ரெட்டணை கிராமத்திற்குப் பயணம். அங்கு விளைநிலத்தில் நீண்டதூரம் நடந்தோம்.

மீண்டும் இருசக்கர வாகனத்தில் பயணம். வெள்ளிமேடுப்பேட்டை சென்றடைந்தோம்.

இதோ இங்கு தனது இருசக்கர வாகனத்துடன் நமக்காகக் காத்திருக்கிறார் நண்பர் பிரகாஷ். அவரது வாகனத்தில் தொற்றிக் கொண்டேன்.‌

கொடியம், வடசிறுவளூர், தணியல் கிராமங்களுக்குச் சென்றோம்.
தலைக்கு மேலே கொளுத்தும் வெயில்.

பணிகளை முடித்து, வெள்ளிமேடுப்பேட்டைத் திரும்பினோம்.

அங்கிருந்துப் பேருந்தில் பயணித்து திண்டிவனம் வந்தேன். செஞ்சி பஸ் நிலையத்தில் இருந்து நண்பர் கார்த்திக் உதவியுடன் மேம்பாலத்தைக் கடந்து பஸ் நிலையம் வந்தடைந்தேன்.

பேருந்தில் ஏறி, விழுப்புரம் வந்த போது மதியம் மணி 2ஐ தொட்டது.

ஏறக்குறைய 7 மணி நேரத்தில் 100 கி.மீ.க்கு மேல் இருசக்கர வாகனம், பேருந்து என மாறி மாறி, திண்டிவனம் தாலுகாவைச் சுற்றி சுற்றி வந்திருக்கிறேன்.

ஓரிடத்தில் கூகுள் மேப் என்னை ஏமாற்றியது. இன்னோர் இடத்தில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் இருந்ததால் அம்மையைப் படம் எடுக்க முடியவில்லை. இதற்காக அடுத்த வாரத்தில் திரும்பவும் போக வேண்டும்! போவோம்...

07/08/2026

தவ்வைத் தாயின்
இன்றைய தரிசனம்!

சிறுவாக்கூர் கிராமத்தில்!

சிற்பத்தின் காலம் 12-13ஆம்
நூற்றாண்டு ஆகலாம்!

வீடியோ உதவி: நண்பர்
Thamizh Tamizhan

05/08/2026

கொள்ளார்... மூத்த தேவி..!

கொள்ளார் மூத்த தேவி இன்றைய தினகரனில் செய்தியாகக் காட்சியளிக்கிறாள்!
04/08/2026

கொள்ளார் மூத்த தேவி

இன்றைய தினகரனில் செய்தியாகக் காட்சியளிக்கிறாள்!

கொள்ளார், பெலாகுப்பம், வேம்பூண்டி...திண்டிவனம் நகரத்தையொட்டி அமைந்துள்ள கிராமங்கள்!சிப்காட் - தொழிற்சாலை வளாகங்கள் இந்தக...
03/08/2026

கொள்ளார், பெலாகுப்பம், வேம்பூண்டி...
திண்டிவனம் நகரத்தையொட்டி அமைந்துள்ள கிராமங்கள்!

சிப்காட் -
தொழிற்சாலை வளாகங்கள்
இந்தக் கிராமங்களை ஓரளவு ஆக்கிரமித்துள்ளன!

வளர்ச்சி, நகரமயமாதல் - இவற்றில் பிடிகளில் மேற்காணும் கிராமங்கள் இன்னும் முழுமையாக சிக்கவில்லை!

தனது பழம்பெரும் அடையாளங்களைத் தக்க வைத்தே வருகின்றன!

அப்படியான, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த அடையாளங்களில் ஒன்றான இக்கொற்றவைச் சிற்பமும்
'வன துர்க்கை' வழிபாடும்
இன்றும் இப்பகுதி மக்களிடையே
நின்று நிலவுகிறது!

இந்தக் கொற்றவைச் சிற்பத்தில் அவளது வாகனமான மான், மிகவும் அழகாகக் காட்டப்பட்டுள்ளது!
என்னை மிகவும் கவர்ந்தது!

இந்த மானைப் பாருங்கள் அழகு என்று பாடத் தோன்றுகிறது!

01/08/2026

கொள்ளார்/ திண்டிவனம்/ மூத்த தேவி/ தவ்வை/

பாராட்டப்பட வேண்டியவர்கள்...கொள்ளார்... திண்டிவனம் நகரத்தையொட்டியுள்ள கிராமம்!இந்தக் கிராமத்தின் ஏரிக் கரையில், முக்கால்...
01/08/2026

பாராட்டப்பட வேண்டியவர்கள்...

கொள்ளார்... திண்டிவனம் நகரத்தையொட்டியுள்ள கிராமம்!

இந்தக் கிராமத்தின் ஏரிக் கரையில், முக்கால்வாசி மண்ணுக்குள் புதைந்த நிலையில் மூத்த தேவியின் சிற்பம் அமைந்திருந்தது.

'துர்க்கை' என அப்பகுதி மக்கள்
வழிபட்டு வந்தனர்.
வழிபட்டும் வருகின்றனர்!

கடந்த மாதம் 14ஆம் தேதி நான் இங்குச் சென்றிருந்தேன். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மதன், செல்வகுமார் உள்ளிட்ட நண்பர்கள் 'சிலையை வெளியே எடுக்க முயற்சி செய்து வருவதாக'த் தெரிவித்தனர்.

அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நான் 'எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடியுங்கள்' என்று கேட்டுக் கொண்டேன்.

சொன்னபடியே, சீக்கிரத்திலேயே முடித்துவிட்டனர் நண்பர்கள்!

ஆமாம்: மண்ணுக்குள் புதையுண்டு இருந்த மூத்த தேவி மீட்கப்பட்டு விட்டாள். அங்கிருந்து சிறிது தொலைவில் உயரமான மேடு அமைத்து அதன் மீது பீடமும் அமைக்கப்பட்டுள்ளது.

பீடத்தின் மீது தூக்கி நிறுத்தப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கிறாள்
தவ்வைத் தாய்!

மிகவும் மகிழ்ச்சி...

நண்பர் மதன் உள்ளிட்டோரின் பங்களிப்பு இதில் மகத்தானது!

நேற்று, கொள்ளார் சென்றிருந்த நான், மதன் மற்றும் அவருக்குத் துணை நின்ற அனைவரையும் பாராட்டினேன்!

வாழ்த்துகள் தெரிவித்தேன்..!

இத்தனை நாட்களாக ஏரிக்குள் புதையுண்டு இருந்தவள் துர்க்கை என வழிபடப்பட்டு வந்தவள் மூத்த தேவி... இன்று வெளியே வந்திருக்கிறா...
29/07/2026

இத்தனை நாட்களாக
ஏரிக்குள் புதையுண்டு இருந்தவள்

துர்க்கை என
வழிபடப்பட்டு வந்தவள்

மூத்த தேவி...
இன்று வெளியே வந்திருக்கிறாள்.

விரிவான விவரங்கள் விரைவில்..!

விடைபெற்றார் மூத்த பத்திரிகையாளர் எம்.ஜெயதேவன்...விக்கிரவாண்டி அருகிலுள்ள ஆவுடையார்பட்டு கிராமம். முத்துரெட்டியார் – தனல...
29/07/2026

விடைபெற்றார் மூத்த
பத்திரிகையாளர் எம்.ஜெயதேவன்...

விக்கிரவாண்டி அருகிலுள்ள ஆவுடையார்பட்டு கிராமம். முத்துரெட்டியார் – தனலட்சுமி தம்பதியரின் மூத்த மகனாக 01.08.1940இல் பிறந்தவர் ஜெயதேவன்.

கிராமத்தில் மிகவும் படித்தவர் இவர்தான். விக்கிரவாண்டி காட்டன் மில், காஞ்சிபுரம் கோ ஆபரேடிவ் சொசைட்டி, விழுப்புரம் தொடக்க வேளாண்மை வங்கி என தனது பணிக்காலங்களைத் தொடங்கிய ஜெயதேவன், தொடர்ந்து, முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் அலுவலராகப் பணியில் சேர்ந்தார். அங்கேயே பல நிலைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

சர்க்கரை ஆலை பணியின் போதே நிர்வாகத்தின் அனுமதி பெற்று 1960களின் மத்தியில் பத்திரிகை துறைக்குள் நுழைந்தார்.

ஒரே நேரத்தில் தினமணி, எக்ஸ்பிரஸ், தினகரன், மாலைமுரசு, மக்கள் குரல், டிரினிட்டி மிரர் ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராக விழுப்புரத்தில் பணியாற்றினார்.

சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர். அதிகாலை முதலே அவரதுப் பணிகள் தொடங்கிவிடும். தபால் தந்தியும், டைப்ரைட்டர் மிஷனுமே அவரது உற்ற நண்பர்கள்.

"எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜெயதேவனுக்கு பத்திரிகை துறையில் நாட்டம் ஏற்பட்டது ஆச்சரியம் தான்" என்கிறார் அவரது இளைய சகோதரர் மூத்த வழக்கறிஞர் ஜெகதீசன் அவர்கள்.

1990களின் தொடக்கத்தில் பத்திரிகை துறையில் நான் அடியெடுத்து வைத்தபோது அப்போதைய ஜாம்பவான்கள், காலம் சென்ற சாமி. விஜயன், ஜெயதேவன் ஆகியோராவர்.

இவர்களுடன் 20 ஆண்டுகள் பணியாற்றிய பெருமை எனக்குண்டு. ஜெயதேவன் சாருக்கு என் மீது தனிப்பட்ட முறையில் பாசம் உண்டு. பல நேரங்களில் அவர் அறிவுறுத்தலை நான் உள்வாங்கி இருக்கிறேன்.

ஜெயதேவன் மிகவும் அமைதியானவர். அநாவசியமாக பேச மாட்டார். ஆங்கில அறிவு மிக்கவர். ஒருகட்டத்தில் ஆங்கிலம் தெரியாத என்னைப் போன்றோரை சக நண்பர்களைக் காப்பாற்றிவர்.

பத்திரிகை துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் கொண்டவர், ஏறக்குறைய அரை நூற்றாண்டு கால விழுப்புரம் மாவட்ட நிகழ்வுகளின் சாட்சியாகத் திகழ்ந்தவர்.

அவர் வாழுங் காலத்திலேயே அவரது அனுபவங்களைத் தொகுத்திருக்க வேண்டும். பதிவு செய்திருக்க வேண்டும். நிகழ்கால, எதிர்கால பத்திரிகை நண்பர்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும்!
இழப்பு தான்!

மூத்த பத்திரிகையாளர் எம்.ஜெயதேவன் அவர்கள், நேற்றிரவு தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டார்.

அடடா... இன்னும் இரண்டு நாட்களைக் கடந்தால் வரும் 1ம் தேதி, அகவை 87இல் அடியெடுத்து வைத்திருப்பார். அதற்குள் என்ன அவசரமோ காலன் அவரை அழைத்துக் கொண்டான்.

பத்திரிகை நண்பர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள் உடன் சேர்ந்து இன்று காலை அஞ்சலி செலுத்தினேன்.

அவரது தலைமாட்டில் மக்கள் குரலும் மாலை முரசும் இருந்தது. ஆம்: இறுதி மூச்சு வரை பத்திரிகையாளராக, பத்திரிகைகளுடனேயே வாழ்ந்தவர் அவர்.

போய் வாங்க சீனியர்...

Address

Villupuram
605602

Alerts

Be the first to know and let us send you an email when விழுப்புரம் வரலாற்றுச் சுவடுகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category