Nangavalli

Nangavalli வரலாறு மற்றும் செய்திகள்

26/07/2026

நங்கவள்ளி ஆட்டுச் சந்தைக்கு விரிவான இடவசதி செய்த நங்கவள்ளி பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றிகள்
ஆடுகள், வியபாரிகள் நிற்பதற்கு போதிய இடம் விட்டு, ஆட்டோ டெம்போ வாகனங்களை புளிய மரத்தடியில் உள்ளே தள்ளி நிறுத்த வேண்டும்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் ஞாயிற்றுக் கிழமைதோறும் வாரச்சந்தைக் கூடுகிறது. இதில் ஆட்டுச் சந்தைக் கூடும் இடம் சிறியதாக இருந்ததால் அருகில் இருக்கும் இடத்தை சுத்தம் செய்து விரிவான இடமாக்க செய்திட வேண்டும் என்று கடந்த சிலமாதங்களுக்கு முன்பு நங்கவள்ளி பேரூராட்சிக்கு பொதுமக்களின் கோரிக்கையாக முகநூலில் பதிவிட்டுயிருந்தோம்.
இந்நிலையில்… மேற்கண்ட ஆட்டுச் சந்தையை ஒட்டி இருந்த இடத்தை jcb இயந்திரம் மூலம் புல் செடிகளை அகற்றி விரிவான இடமாக செய்து கொடுத்த நங்கவள்ளி பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பாக நன்றி நன்றிகள்.
தற்போது விசாலமான இடம் இருந்தும் ஆடுகள், விவசாயிகள், வியபாரிகள் நெருக்கமாக நிற்கவேண்டிய நிலையே தொடர்கிறது. அதனால் ஆடுகளை ஏற்றி வரும் ஆட்டோ, டெம்போ வாகனங்களைப் புளிய மரத்தடியில்( அதாவது மதிற் சுவர் அருகில்) உள்ளே தள்ளி நிறுத்த அறிவுறுத்த வேண்டும்.
மற்ற நாட்களில் உள்ளே யாரும் செல்லாதவாறு கயிறு கட்டித் தடுப்பு வேலி அமைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

21/07/2026

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை மற்றும் ஆய்வகக் கட்டடத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் திரு. இளம் பகவத் அவர்கள் தலைமையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் மாண்புமிகு விசய் தமிழன் பார்த்திபன் அவர்கள் 20-07-2026 அன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், தவெக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

14/07/2026

நங்கவள்ளியில் இருந்து திருமலை திருப்பதிக்கு 21 வது ஆண்டாக நங்கவள்ளி பேரூராட்சி சேர்மேன் திரு.என். சி.மாணிக்கவேல் அவர்கள் முன்னிலையில் திரு பாபு (எ) முத்துகிருட்டிண பட்டாச்சார் தலைமையில் பக்தர்கள் நடைபயணம்.

09/07/2026

நங்கவள்ளியில் சேலம் சாலையில் குழியாக உள்ள ( கேசு பைப் லைன் பதித்த இடம் ) பள்ளம் மற்றும் நங்கவள்ளி தொடக்க வேளாணமைக் கூட்டுறவு கடன் சங்கம் முன்பு சலகண்டாபுரம் செல்லும் குடிநீர் குழாய் பைப் லைனில் ஏற்படும் நீர் கசிவை சரி செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

28/06/2026

சேலம் மரபுச் சந்தை

சேலம் மரபுச் சந்தை (இயற்கை வழி விளை பொருட்கள் ) ஞாயிறுதோறும் காலை 7 மணி முதல் 12 மணிவரை நடைபெறுகிறது.

இயற்கையான முறையில் விளைந்த பாரம்பரிய காய்கறிகள், கீரைகள், பழங்கள் , அரிசி வகைகள், சிறுதானியங்கள் ,கிழங்குகள், மூலிகைகள்,உணவுகள், விதைகள் மற்றும் செடிகள் கிடைக்கின்றது.

இடம்: சேலம் சுவர்ணபுரி மாநகராட்சித் தொடக்கப் பள்ளி. சேலம் கேசுடில் ஓட்டல் பின்புறம். 5 சாலை அருகில் உள்ளது.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி திரௌபதியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா  தை மாதம் 14 ந்தேதி 28.01.2027 வியாழக்கிழமை காலை 8....
26/06/2026

சேலம் மாவட்டம் நங்கவள்ளி திரௌபதியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா தை மாதம் 14 ந்தேதி 28.01.2027 வியாழக்கிழமை காலை 8.00 மணி முதல் 9.30 மணியளவில் நடைபெற உள்ளது.

மேட்டூர் வட்டம் வருவாய் தீர்வாயம்(சமாபந்தி மனு) இன்று நிறைவு பெறுகிறது
24/06/2026

மேட்டூர் வட்டம் வருவாய் தீர்வாயம்(சமாபந்தி மனு) இன்று நிறைவு பெறுகிறது

02/05/2026

நங்கவள்ளி சௌடேசுவரியம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத முழுநிலவை முன்னிட்டு சுவாமி காயத்ரிதேவி தேரி பவனி- 01.05.2026

28/04/2026

நங்கவள்ளி ஊர் நலக் கமிட்டி சார்பில் வெற்றிக்கரமாக ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் (27.04.2022) சித்தமருத்துவ கலிக்கம் கண்களுக்கு மூலிகைச் சாறு விடுதல் நிகழ்வு ஒவ்வொரு மாதமும் 27 ந்தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை நங்கவள்ளி திரௌபதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது.

10 ஆண்டுகளில்( 2017 முதல் 2026 வரை  நங்கவள்ளி  வழியாக புதிய வழித்தடத்தில்   அரசுப் பேருந்துகள்  எத்தனை விடப்பட்டுள்ளது ?...
26/04/2026

10 ஆண்டுகளில்( 2017 முதல் 2026 வரை நங்கவள்ளி வழியாக புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் எத்தனை விடப்பட்டுள்ளது ?

நங்கவள்ளி வழியாக புதிய வழித்தடத்தில் இந்த இரண்டு முதலமைச்சர்களது ( EPS , MKS ) ஆட்சி காலத்தில் அரசுப் புதியப் பேருந்துகள் ஒன்று கூடவிடவில்லை என்று முகநூலில் பதிவிட்டுருந்தேன்.
பேருந்துகள் விட்டவிபரங்கள் நினைவுள்ள சிலர், மே 4 ந்தேதிக்கு பிறகு ஆட்சி அமைந்த உடன் புதிய அரசு பேருந்துகள் விடலாம் என்று கருத்திட்டுருந்தனர். ஒரு சிலர் எப்படி இப்படி சொல்லாம், இது தவறு என்றும் கருத்திட்டுருந்தனர்.
இது பற்றி ஆதாரத்துடன் 2015 ஆம் ஆண்டில் நன்றி அறிவிப்பு அறிக்கையினை இங்கு பதிவிடுவதன் மூலம் 2017 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை சுமார் பத்து ஆண்டுகளில் புதிய அரசுப் பேருந்துகள் நங்கவள்ளி வழியாக எத்தனை விடப்பட்டுள்ளது என்பதை தாங்களே தெரிந்து கொள்ளலாம்.
மேலும், 76 நெ அரசு நகர பேருந்து இப்பொழுது விடவில்லை. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சிங்கிள் ( நடை) விடுவதும், ஆறு மாதத்தில் அந்த பேருந்தை நிறுத்துவதும், பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு சிங்கிள் விடுவதும் , தற்போது ஒரு சில ஆண்டுகளாக நகரப் பேருந்துகள் நெ 34 மற்றும் நெ 35 நெ 24, நெ O 11 ஒரு சிங்கிள் மாற்றி இயக்குவது அரசுப் போக்குவரத்து கிளை பணிமனை (டிப்போ) யில் அவ்வப்போது சூழ்நிலைக்கு ( வசூல் குறைவு, பொதுமக்கள் கோரிக்கை ) தகுந்தபடி செயல்படும் நிலைதான் ஆண்டாண்டு காலங்களாக இருந்து வருகிறது. இது நிரந்தரம் அல்ல. இது சாதனையும் அல்ல.

அதனால், யார் ஆட்சி அமைத்தாலும் நங்கவள்ளி வழியாக புதிய அரசு பேருந்துகள் இம்முறை விடப்படும் என்பதில் மாற்றமில்லை என்றே கருதுகிறேன். நன்றி.
-நங்கவள்ளி ந.பெகோ.,

Address

Nangavalli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nangavalli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to Nangavalli:

Shortcuts

Share

Category